இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதல்: தெலுங்கானாவில் பரபரப்பு

0
146

இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதல்: தெலுங்கானாவில் பரபரப்பு

தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத் ரயில் நிலையத்தில் இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கச்சிகுடா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் மீது பயணிகள் ரயில் ஒன்று திடீரென மோதியதால் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 10 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து இருப்பதாகவும் அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

இந்த விபத்து சிக்னல் கோளாறு காரணமாக ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த விபத்தை அடுத்து கச்சிகுடா ரயில் நிலையத்தில் இருந்து கிளம்ப வேண்டிய ஒப்ருசில ரயில்கள் தாமதமாக கிளம்பும் என்ற ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

இந்த விபத்து குறித்தும், சிக்னல் செயல்படாதது ஏன் என்பது குறித்தும் ரயில்வே துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். குறிப்பாக பயணிகள் ரயிலின் டிரைவரிடம் தற்போது அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். முழு விசாரணைக்கு பின்னரே என்ன நடவடிக்கை என்பது குறித்து ரயில்வே துறை அதிகாரிகள் முடிவு செய்வாரகள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Previous articleகொலை நகரமாக மாறும் புதுச்சேரி! பிரபல ரவுடி மீது வெடிகுண்டு வீசி படுகொலை ஒரே வாரத்தில் இரண்டு ரவுடிகள் படுகொலை செய்யப்பட்டனர்
Next articleடெல்லி காற்று மாசுவை தடுக்க விஞ்ஞானி கூறிய அசத்தல் ஐடியா!