தடம் புரண்ட எக்ஸ்பிரஸ் ரயில்!! உயிர் சேதம் இன்றி தப்பித்த பயணிகள்!

Photo of author

By Vijay

தடம் புரண்ட எக்ஸ்பிரஸ் ரயில்!! உயிர் சேதம் இன்றி தப்பித்த பயணிகள்!

பாகிஸ்தான் குவாட்டா நகரில் இருந்து ஜபார் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை பெஷாவர் நோக்கி சென்றபோது விபத்து.

பாகிஸ்தான் குவாட்டா நகரில் இருந்து புறப்பட்ட ரயில் பலுசிஸ்தான் மாகாணத்தின் பலோன் மாவட்டம் அருகே சென்றபோது தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியதால் வேகமாக வந்த ரயில் தடம் புரண்டது.

அப்போது தண்டவாளத்தை விட்டு நகர்ந்த பெட்டிகள் மல மலவென சாயத் தொடங்கின இதில் ஆறுக்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் சாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை 8 பயணிகள் மட்டும் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்.

விபத்து குறித்து தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்தை விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் மீட்புமணியில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

மேலும் இந்த சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை அறிவித்துள்ளது.