தமிழக காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாக அறிவிப்பு வெளியானதோடு அதற்கான கால அவகாசம் மே 3 ஆம் தேதி வரை கொடுக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இந்த கால அவகாசமானது மே 10 தேர்வர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.
சீருடை பணியாளர் தேர்வாணையம் தமிழக காவல்துறையில் இருக்கக்கூடிய காலி பணியிடங்களை நிரப்பி வருகிறது இதற்கான அறிவிப்புகள் அபபோது வெளியிடப்படுவதும் உண்டு அப்படியாக காவல்துறையில் பணியாற்ற வேண்டும் என காத்திருக்கக்கூடிய இளைஞர்களுக்கு இசை தேர்வுக்கான அறிவிப்பை சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 3 ஆம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு மே 10ஆம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் காலியாக இருக்கக்கூடிய 1352 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானதோடு 53 இடங்கள் எஸ்சி எஸ்டி வகுப்பினருக்கும் பின்னடைவு பணியிடங்கள் என குறிப்பிடப்பட்டு வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இதற்கு வயது வரம்பு 30 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும் என்றும் பி சி, பி சி முஸ்லிம் ,எம் பி சி உள்ளிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பாக 32 இருக்கலாம் என்றும் எஸ்சி , எஸ்டி மூன்றாம் பாலினத்தவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிகபட்ச வயது வரம்பானது 35 என்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு 37 இன்றும் வயதுவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.