ஆதார் கார்டு பெற்று 10 வருடங்கள் கடந்து விட்டால் கண்டிப்பாக அதனை புதுப்பிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில், ஆதார் கார்டை புதுப்பிக்க டிசம்பர் 14 கடைசி தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பெரும்பாலானோர் இன்னும் தங்களுடைய ஆதார் கார்டை புதுப்பிக்காத நிலையில் மத்திய அரசானது கால நீட்டிப்பு செய்திருப்பது வரவேற்கத்தக்க விஷயமாக கருதப்படுகிறது.
மத்திய அரசு அடுத்த வருடம் ஜூன் மாதம் 14ஆம் தேதி வரை ஆதார் அட்டையை புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீடித்துள்ளது. ஒவ்வொரு 10 வருடத்திற்கும் ஒரு முறையும் மக்கள் ஆதார் அட்டையை புதுப்பிப்பது அவசியம் என்பதால் இந்த வேலையை முடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் https:/myaadhaar.uidai.gov.in/என்ற இணையதள முகவரிக்குள் சென்று இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம். இல்லையெனில் அருகில் உள்ள ஆதார் சேவை மையத்திற்கும் சென்றும் புதுப்பிக்கலாம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நம்முடைய அன்றாட வாழ்வில் பல முக்கியமான விஷயங்களுக்கு தேவைப்படக்கூடிய ஆதார் கார்டை புதுப்பித்து மற்றும் மேம்படுத்தி வைத்துக் கொள்வது என்பது நம்முடைய அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறி வருகிறது. எனவே தேவையை உணர்ந்து அனைவரும் தங்களுடைய ஆதார் கார்டில் பெயர் முகவரி மற்றும் செல்போன் நம்பர் போன்றவற்றை இந்த கால அவகாசத்தினை பயன்படுத்தி மாற்றிக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்.