மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை! வெளியான மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தி 

Photo of author

By CineDesk

மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை! வெளியான மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தி 

CineDesk

மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை! வெளியான மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தி

மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதில் சர்வர் கோளாறு காரணமாக சிக்கல் எழுந்துள்ளது. இதனை அடுத்து விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் ஏற்கனவே நடைமுறையில் உள்ள சில திட்டங்களில் புதிய மாற்றங்கள் ஏற்படுத்தி அவை சிறப்பான முறையில் செயல்படுத்தப்படவும் உள்ளது.

அந்த வகையில், சமீபத்தில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என்று மாற்றி அமைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.

உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 அளிக்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கால அவகாசம் இன்றுடன் முடியவிருந்த நிலையில் ஜூலை 10-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இத்திட்டத்தின்கீழ், 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து மேல்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படும் என்றும், மேல்படிப்பை முடிக்கும் வரை மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்து.

அது மட்டுமின்றி, மாணவிகள் மற்ற கல்வி உதவித்தொகை பெற்றுவந்தாலும், இந்த உதவித்தொகையும் வழங்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது. கல்வி உதவித் தொகை திட்டத்தின்கீழ் ரூ.1000 உதவித் தொகை பெற இதுவரை சுமார் 2 லட்சம் மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

மாணவிகள் www.penkalvi.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் விவரங்களை பதிவேற்ற வேண்டும். கல்வி உதவித் தொகை திட்டம் குறித்த விவரங்களுக்கு கட்டணமில்லா எண் 14417ல் தொடர்புக் கொள்ளலாம்.