இடுக்கி அணை நிரம்பி வருவதனைத் தொடர்ந்து எர்ணாகுளம் பகுதிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை !!

0
102

கேரளாவில் உள்ள மிகப்பெரிய அணையான இடுக்கி அணை வேகமாக நிரம்பி வருவதால், எர்ணாகுளத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளா மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி, கொட்டயம் ,திருச்சூர், பாலக்காடு ,கோழிக்கோடு, வயநாடு ,மலப்புரம் ,காசர்கோடு ஆகிய 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தொடர் கனமழையின் காரணமாக கேரளாவின் மிகப்பெரிய அணையான இடுக்கி அணைக்கு நீர்வரத்து அதிகமாக வருகிறது. இதனால் நீர்மட்டம் 2391.04 அடியை எட்டியதைதொடர்ந்து எர்ணாகுளத்துக்கு நீர் திறக்கும் அபாயம் உள்ளது. இதனால் அப்பகுதிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது அணையின் நீர்மட்டம் 2398.85 எட்டும்பட்சத்தில், அணையை திறந்துவிடப்படும் என்பதனால் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும்,நீர் செல்லும் வழியில் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அம்மாநில அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Previous articleதிருட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கிய எருமை!! நெகிழ்ச்சியில் காவல்துறையினர்!
Next articleசென்னைவாசிகள் கவனத்திற்கு..! உற்சாக உத்தரவு.. உயர்நீதிமன்றம் அதிரடி.!