Health Tips

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்! இதை செய்து பாருங்கள்!

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்! இதை செய்து பாருங்கள்!

முகம் புத்துணர்ச்சி பெற முதலில் மிக்ஸியில் சிறிது உலர்ந்த முந்திரி பழத்தைப் போட்டு அத்துடன் சிறிது காபித் தூள் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அந்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைத்து

பின் நீரால் முகத்தைக் கழுவி முகத்தை துணியால் துடைத்து மாய்ஸ்சுரைசர் எதையாவது பயன்படுத்தினால் எப்பொழுதும் புத்துணர்ச்சி காணப்படும்

உதடுகள் சிவப்பாக மாற இதனை செய்யலாம்பீட்ருட் மற்றும் மாதுளம் பழம்  மிகவும் உதவியாக இருக்கும். பீட்ரூட் உதடுகளை சிவப்பாக்குவதில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. பீட்ருட் அல்லது மாதுளம் பழத்தின் சாற்றை உதடுகளின் மீது பூசி வந்தால் உதடுகள் மிக விரைவிலேயே கவர்ச்சியாக மாறும். எனவும் இயற்கை வைத்தியம் கூறுகின்றது.

எண்ணெய் பிசுக்கு நீங்க இதை பின்பற்றலாம்  ஒரு டீஸ்பூன் முல்தானி மட்டி  ஒரு டீஸ்பூன் சந்தன பொடி  மற்றும் பன்னீருடன் கலந்து கொள்ளவும்.இந்த பேஸ்ட் கெட்டியாகவும் இருக்க கூடாதுஇ நீராகவும் இருக்க கூடாது.அதனால் அதற்கேற்ப அளவில் பன்னீரை சேர்த்துக் கொள்ளவும்.

இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி கொண்டுஇ 20-30 நிமிடங்கள் வரை அப்படியே விட்டு பின் சாதாரண நீரில் முகத்தை கழுவிக் கொள்ளலாம் இந்த முறையில் வாரம் 2 முறை செய்து வந்தால் முகத்தில் உள்ள என்னை பிசுக்கள் நீங்கி முகம் அழகு பெறும்.

Leave a Comment