முகக்கவசம் கட்டாயமில்லை!! அதிரடி காட்டிய சென்னை உயர்நீதிமன்றம்!
கொரோனா தொற்றானது கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.தற்போது வரை மக்கள் அதிலிருந்து மீள முடியாமல் உள்ளனர்.கொரோனாவை அடுத்து ஒவ்வொரு காலக்கட்டத்திற்கும் ஏற்ப அந்த தொற்றுகளும் மாறுபட்டு பரவிய நிலையில் தான் உள்ளது.தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த பல கட்டுப்பாடுகள் கொண்டு வந்தாலும் குறைந்த பாடில்லை.இதனை தடுக்க பூஸ்டர் தடுப்பூசி வரைநடைமுறை படுத்திவிட்டனர்.ஆனால்எந்தவித மாற்றமும் இல்லை.நான்கு அலைகளை கடந்து தற்போதும் தொற்றானாது பரவி வருகிறது.
இதனிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முதலில் அனைவரும் முக்கக்கவசம் அணிவது கட்டாயம்.அத்தோடு சமூக இடைவெளியையும் கடைபிடிப்பது கட்டாயம் ஆகும்.தொற்று அதிகளவில் பரவும் போது மட்டும் இந்த அரசாங்கம் முகக்கவசம் போடுவதை கட்டாயமாக்குகிறது.அதாவது முகக்கவசம் போடவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் போன்ற விதிமுறைகளை அமல்படுத்துகிறது.
தொற்று பாதிப்பு குறையும் வேளையில் எதையும் கண்டுகொள்வதில்லை.தற்போது மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.இச்சமையத்தில் முகக்கவசம் அணியவில்லை என்றால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று அரசானை வெளியிட்டனர்.இந்த அரசாணையை ரத்து செய்யும்படி வழக்கறிஞர் ராமமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார்.அந்த வழக்கு நீதிபதி முன்னிலையில் இன்று அமர்வுக்கு வந்தது.எந்தவித ஆய்வுகள் இன்றி இந்த மனுவானது தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனக் கோரி நீதிமன்றம் அந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்துள்ளது.நீதிமன்றம் ரூ.10000 ஆயிரம் அபராத தொகையை கட்டும்படி கூறியுள்ளனர்.