கல்வி இயக்ககத்தின் வார்னிங்! அனைத்து கலைக்கல்லூரிகளுக்கும் பறந்த அதிரடி உத்தரவு! 

0
79
Education Directorate Warning! Action order to all art colleges!
Education Directorate Warning! Action order to all art colleges!

கல்வி இயக்ககத்தின் வார்னிங்! அனைத்து கலைக்கல்லூரிகளுக்கும் பறந்த அதிரடி உத்தரவு!

இந்த ஆண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பிற்கான பொது தேர்வு முழுமையாக நடைபெற்று முடிந்தது. இரண்டு ஆண்டுகள் பொது தேர்வு நடைபெறாத இருந்த வேலையில் இந்த ஆண்டு மாணவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதில் 85 சதவீதம் மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இருக்கும் வேலையில் அரசு கலைகல்லூரியில் சேருவதற்கான விண்ணப்ப தேதி முடிவடைந்துவிட்டது.அதற்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.

சிலர் பத்தாம் வகுப்பு முடித்த உடனே டிப்ளமோ சேர்வது வழக்கம். டிப்ளமோ முடித்தவர்கள் மேற்கொண்டு பிஇ  படிக்கலாம். அதுமட்டுமின்றி டிப்ளமோ முடித்தவர்கள் நேரடியாக பிகாம் இரண்டாம் ஆண்டு சேரலாம் என கல்வி இயக்ககம் உத்தரவிட்டது. அதன் பேரில் டிப்ளோமா முடித்த மாணவர்கள், பி காம் இரண்டாம் ஆண்டில் சேர்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் பல கல்லூரிகள் டிப்ளமோ முடித்து வரும் மாணவர்களை இரண்டாம் ஆண்டு பிகாமில் சேர்வதற்கு அனுமதி வழங்குவதில்லை.

டிப்ளமோ முடித்த மாணவர்களுக்கு சேர்க்கை நடைபெறுவதில்லை என்று வரும் மாணவர்களை அலை கழிப்பதாக பல புகார்கள் வந்துள்ளது. இதனை  கண்ட கல்வி இயக்ககம் அனைத்து கல்லூரிகளுக்கும் புதிய உத்தரவு ஒன்றை அமல்படுத்தியுள்ளது. அனைத்து வகை கலை அறிவியல் கல்லூரிகளிலும் டிப்ளமோ முடித்து வரும் மாணவர்களை பிகாம் இரண்டாம் ஆண்டில் சேர்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இந்த உத்தரவின் பேரில் டிப்ளமோ முடித்த மாணவர்கள் கலை அறிவியல் கல்லூரிகளில் எந்தவித தடையின்றி சேரலாம்.