தாலிபான்கள் மீது நடவடிக்கை! பேஸ்புக் அதிரடி அறிவிப்பு!

Photo of author

By Parthipan K

தாலிபான்கள் மீது நடவடிக்கை! பேஸ்புக் அதிரடி அறிவிப்பு!

தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றி அங்கு ஆதிக்கம் செய்து வருகின்றனர்.பல மக்களும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியுள்ளனர்.இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களுக்கு எந்த விதமான இன்னல்களும் இனிமேல் வரக்கூடும்.அதனை கருத்தில்கொண்டு உலக நாடுகள் ஆப்கானிஸ்தான் மக்களுக்காக வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

தாலிபான் அமைப்பானது உலகின் முக்கிய தீவிரவாத அமைப்புகளில் ஒன்றாகும்.இந்த அமைப்பு அடிப்படைவாத அமைப்பாக இருக்கிறது.அமெரிக்க ராணுவமும் தாலிபான்களை பார்த்து பின்வாங்கி இருக்கிறது.இதனிடையே அமெரிக்க நிறுவனமான பேஸ்புக் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.தாலிபான் அமைப்பானது ஒரு தீவிரவாத அமைப்பு என்றும் அவர்களுக்கு ஆதரவாக பதிவிடப்படும் அனைத்துப் பதிவுகளையும் நீக்கப் போவதாகவும் பகிரங்கமாக அறிவித்துள்ளது.

இதற்காக குழு ஒன்றை அமைத்து அந்தக் குழுவில் ஆப்கன் மொழியில் தேர்ந்த நபர்களையும் அரசியல் நிபுணர்களையும் நியமித்து பேஸ்புக் பதிவுகளை நீக்க இருப்பதாகவும் பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.அமெரிக்க ராணுவமும் தாலிபான் அமைப்பும் எதிர் நின்று போர் புரியக்கூடிய ரானுவங்களாக இருக்கின்றன.அமெரிக்க அரசியல் சட்டத்தின்படி தாலிபான்கள் தடை செய்யப்பட்ட அமைப்பாக இருப்பதால் அந்த அமைப்பும் அது தொடர்பான நபர்களின் பதிவுகளும் உள்ளடக்கமும் தடை செய்வதாகவும் பேஸ்புக் அறிவித்துள்ளது.

மேலும் ட்விட்டரிலும் தாலிபான் அமைப்புகள் பெருமளவில் பதிவுகள் செய்கிறது.ஆனால் ட்விட்டர் நிறுவனம் அந்த அமைப்பின் பதிவுகள் தடையைப் பற்றி இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை.கடந்த நான்கு நாட்களாக சமூக வலைத்தளங்களில் தாலிபான்கள் குறித்தான செய்திகளே முதன்மையாக இருக்கின்றன.இதில் தாலிபான் அமைப்புக்கு கண்டம் தெரிவிக்கும் மக்கள் அதிகம் இருந்தாலும் அந்த அமைப்புக்கு ஆதரவான பதிவுகளும் வந்து கொண்டிருக்கின்றன.