10-வது படித்துவிட்டு மருத்துவராக பணியாற்றிய பலே ஆசாமி கைது! இந்த காரணத்தால் சிக்கினார்?

Photo of author

By Jayachandiran

சிவகங்கை: பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு பல வருடங்களாக மருத்துவராக செயல்பட்டு வந்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் 56 வயதுடைய ராமசாமி என்பவர் பல ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வந்தார். நீண்ட நாட்களாக அப்பகுதி மக்களுக்கு மருத்துவம் பார்த்துவந்த நிலையில், இவரிடம் சிகிச்சை பெற்றும் பல்வேறு நோய்கள் குணமாவதில்லை என்று பலர் தொடர் குற்றச்சாட்டு வைத்திருந்தனர். இந்த புகாரை அடுத்து அப்பகுதி வட்டார மருத்துவ அலுவலரும், போலீசாரும் போலி மருத்துவரை நோக்கி விரைந்தனர்.

ராமசாமி வீட்டில் சோதனை செய்ததில் அவர் மருத்துவர் என்பதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. மேலும் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு தன்னை ஒரு மருத்துவர் என்று கூறிக்கொண்டதும் அம்பலமாகியது. இத்தனை வருடங்களாக தான் ஒரு மருத்துவர் என்பதுபோல் அப்பகுதி மக்களுக்கு அடையாளமாக இருந்த ராமசாமி, தற்போது போலி என்பதை அறிந்ததும் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்து, அவர் வீட்டில் இருந்த மருந்து பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.