இஞ்சி பற்றி நீங்கள் அறியாத உண்மைகள்! இந்த நோய்களை உடனே குணப்படுத்தும்!
நாம் அன்றாடம் வாழ்வில் சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய இஞ்சியின் நன்மைகளைப் பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம்.
தற்போதுள்ள காலகட்டத்தில் வேலைகளை நோக்கி செல்கின்றோம். உடம்பில் சிறிய பிரச்சனை ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று அதனை குணப்படுத்துகின்றோம்.
இதனை நாம் வீட்டில் இருந்தபடியே குணப்படுத்தும் சில பொருட்களின் பலன்களை பற்றி நாம் தெரிந்து கொள்வதில்லை. நம் சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய இஞ்சியில் உள்ள பலன்களை பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம்.
ஒரு டம்ளர் பாலுடன் இஞ்சி சாறு கலந்து குடிப்பதன் மூலமாக வயிற்றுப் பிரச்சனைகள் முழுமையாக குணமடைந்து விடும்.இஞ்சி டீ அல்லது இஞ்சி சாறு குடிப்பதன் மூலமாக பசியின்மை குணமடைகிறது மற்றும் செரிமான பிரச்சனைகளை குணப்படுத்துகிறது. மேலும் மலச்சிக்கலை குணப்படுத்தும், பல்வலி இருக்கும் இடத்தில் இஞ்சி சிறிதளவு துண்டாக நறுக்கி வலியுள்ள இடத்தில் ஐந்து நிமிடம் வைத்தால் பல்வலி குறையும்.
இஞ்சியினை நன்றாக அரைத்து மற்றும் துளசி இலை ஆகிய இரண்டையும் நீருடன் கலந்து அதனை வடிகட்டி குடித்து வந்தால் செரிமான பிரச்சனைகள் குணமடையும்.