பார்த்திபன் பாணியில் ஃபஹத் பாசில்… பரிசோதனை முயற்சியாக தந்தை இயக்கத்தில் ஒரு படம்!
நடிகர் பஹத் பாசில் அடுத்து தன்னுடைய தந்தை இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான இந்த படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல், பல்வேறு திரைப்பட விழாக்களிலும் பங்குபெற்று வரவேற்பை பெற்று, பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளது. அந்த வகையில், இரண்டு தேசிய விருதுகளை இந்த படம் வென்றுள்ளது. இந்த திரைப்படம் முழுவதும் பார்த்திபன் மட்டுமே நடித்திருப்பார். இதுபோல ஹாலிவுட்டில் BUrried போன்ற திரைப்படங்கள் வெளியாகி பாராட்டுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இப்போது ஒத்த செருப்பு போல ஒரு பரிசோதனை முயற்சி திரைப்படத்தில் நடிகர் ஃபஹத் பாசில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படம் முழுவதும் அவர் மட்டுமே தோன்றுவார் என்று சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தை அவரின் தந்தை பாசில் இயக்குகிறார் என்று சொல்லப்படுகிறது.
சமீபத்தில் வெளியான புஷ்பா, விக்ரம் மற்றும் மாலிக் ஆகிய திரைப்படங்கள் மூலம் மலையாள மொழி தாண்டியும் சினிமா ரசிகர்களால் அறியப்பட்டுள்ளார் பஹத் பாசில். அடுத்து அவர் நடிப்பில் மலையன் குஞ்சு என்ற திரைப்படம் இன்று ரிலீஸாகியுள்ளது குறிப்பிடத்தகக்து.