இன்றைக்குள் இதை செய்யாவிட்டால் அபராதம் இருமடங்காகும்!

0
115

பான் எனப்படும் வருமான வரி நிரந்தர கணக்கு என்னுடன் ஆதார் எண்ணை இன்னும் இணைக்கவில்லையென்றால் நாளை முதல் இருமடங்கு அபராதம் செலுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று முன்னரே தெரிவிக்கப்பட்டிருந்தது.

அரசின் உத்தரவின் அடிப்படையில் ஒவ்வொரு குடிமகனும் தன்னுடைய பான் எண் மற்றும் ஆதார் ஒலித்தவற்றை கட்டாயமாக இணைக்க வேண்டும். இந்த இரு எண்களை இணைப்பதற்கு இந்த வருடம் மார்ச் மாதம் 31ஆம் தேதி கடைசி நாள் என்று வருமானவரித்துறை தெரிவித்திருந்தது.

அதன் பிறகு இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதே நேரம் இந்த எண்களை இணைக்காமல் இருந்தவர்களுக்கு ஆறுதல் தரும் விதத்தில் மத்திய அரசு எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி வரையில் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டது.

ஆனாலும்கூட இதில் ஒரு சூட்சமத்தை வைத்தது மத்திய அரசு மத்திய நேரடி வருமான வரித்துறை மார்ச் 30 ஆம் தேதிக்கு பிறகு ஜூன் மாதம் 30ஆம் தேதிக்குள் இணைப்புகளுக்கு 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்று அறிவித்தது. அதோடு ஜூலை முதல் தேதியிலிருந்து இந்த அபராதம் 1000 ரூபாயாக வசூலிக்கப்படும் என்று தெரிவித்திருந்தது.

இந்த புதிய நீட்டிக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் இணைக்காவிட்டால் அடுத்த வருடம் ஏப்ரல் முதல் தேதியிலிருந்து பான் கார்டு செயலற்றதாக ஆக்கப்படும். அதன் பின்னர் அந்த எண்ணை எதிலும் பயன்படுத்த இயலாமல் போவதற்கான வாய்ப்புள்ளது எனவும், சென்ற மார்ச் மாதம் 30 ஆம் தேதி அன்று வருமானவரித்துறை அறிவித்திருந்தது.

ஆகவே நாளை முதல் அபராதம் இரு மடங்காக அதிகரிக்கிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் இன்றைக்குள்ளாக ஆதார் மற்றும் பான் எண்ணை இணைத்து விடுவது நல்லது.