மக்களே உஷார்!! உலாவும் போலி தடுப்பூசி ஆஃப்கள்:! எச்சரிக்கும் அரசு!

Photo of author

By Pavithra

மக்களே உஷார்!! உலாவும் போலி தடுப்பூசி ஆஃப்கள்:! எச்சரிக்கும் அரசு!

Pavithra

மக்களே உஷார்!!உலாவும் போலி தடுப்பூசி ஆஃப்கள்:!எச்சரிக்கும் அரசு!

வலைதளங்களில் போலி கோவின் தடுப்பூசி ஆஃப்களை ஹேக்கர்கள் பரப்பி மக்களின் தகவல்களை திருடி வருவதாகவும்,கீழ்கண்ட ஆப்புகளை மக்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும், மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் கோரத்தாண்டவம் எடுத்திருக்கும் நிலையில் அனைவருக்கும் தடுப்பூசி என்ற திட்டத்தை மத்திய அரசு விரைவு படுத்திவருகின்றது.இதனால் மக்களுக்கு விரைவாக தடுப்பூசி சென்றடைய,டிஜிட்டல் மயமாக்கப்பட்ட பதிவை பெறும் வகையில் மத்திய அரசு சில வலைதளங்களை வெளியிட்டுள்ளது.ஆனாலும் கொரோனா நெருக்கடி காரணமாக,பதிவு செய்யும் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசிகளுக்கான ஸ்லாட்டுகள் உடனடியாக கிடைப்பது என்பது கடினமானதாக இருக்கின்றது.இத்தகைய சூழலை பயன்படுத்தி சில ஹேக்கர்கள் போலி மற்றும் ஆபத்தான APK கோப்புகளை வலைதளங்களில் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த கோப்புகளை நமது செல்போனில் பதிவிறக்கம் செய்தவுடன் நமது தகவல்களை திருடுவதற்காக,உங்கள் செல்போனின் தேவையில்லாத அனுமதிகளை கேட்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாம் இது போன்ற கோப்புகளை பதிவிறக்கம் செய்து,அவைகள் கேட்கும் அனைத்து தகவலுக்கும் அனுமதி அளித்துவிட்டால் நமது செல்போனின் அனைத்து தகவல்களும் ஹேக் செய்யப்படுவதாக மத்திய அரசு மற்றும் சைபர் கிரைம் எச்சரித்துள்ளது.

மேலும் இது எந்தெந்த பயன்பாடுகள் என்றும் சைபர் கிரைம் வெளியிட்டுள்ளது.

கோவிட் -19.apk
MyVaccin_v2.apk
Vaci__Regis.apk
Vccin-Apply.apk
Cov-Regis.apk

மேலே குறிப்பிட்டுள்ள இந்த ஐந்து பயன்பாடுகளையும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும்,தடுப்பூசிகளுகாக பதிவு செய்யும் மக்கள் cowin.gov.in வலைதளம் அல்லது ஆரோக்கிய செய்து பயன்பாட்டின் மூலம் மட்டுமே பதிவு செய்ய அறிவுறுத்துகிறது.
வேறு பிற எந்த பயன்பாடுகள் மூலமாகவோ அல்லது வலைதளங்களின் மூலமாகவோ தடுப்பூசி பதிவு செய்ய இயலாது என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.