கொரோனாவை அடுத்து பரவிவரும் புதிய நோய்! தப்புமா மனித இனம்?

0
92

நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பரவி வருகிறது. ஆனால் இந்த நோய் தொற்றிலிருந்து மீண்டு வருபவர்கள் சற்று நிம்மதி அடைந்திருக்கிறார்கள். இந்த நிலையில். பொதுமக்களுக்கான அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது இந்த நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவர்களை மியூகோர்மை கோஸிஸ் என்ற நோய் தாக்குவதற்கான அபாயம் இருக்கிறது என்பதுதான் அந்த தகவல்.

இந்த நோயின் அறிகுறிகள் என்னவென்றால் காய்ச்சல், தலைவலி, கண்களில் வலி நாசியில் தொந்தரவு போன்றவை என தெரிவிக்கப்படுகிறது. நோய் தொற்று வைரஸ் பரவல் தொடங்கியதிலிருந்து தற்போது வரையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த நோயின் பாதிப்பு காரணமாக 52 பேர் கருப்பு பூஞ்சைத் தொற்றுக்கு ஆளாகி பலியாகி இருக்கிறார்கள். என்று அந்த மாநில அரசு தெரிவித்திருக்கிறது.

இதுவரையில் இந்த கொரோனா தொற்றிற்காக ஒரு வகை சிகிச்சை முறை இருந்து வருகிறது. ஆனால் தற்போது தலை தூக்கியிருக்கும் இந்த நோய்க்கு வேறு விதமான சிகிச்சை முறை தேவைப்படுகிறது. அது மகாராஷ்டிரா அரசுக்கு கூடுதல் பிரச்சனையை உண்டாக்கியிருக்கிறது. இந்த நோய்த்தொற்றின் முதல் அலையின் சமயத்தில் கருப்பு பூஞ்சைத் தொற்றுக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் மிகச் சிலரே பலியாகியிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

ஆனாலும் தற்சமயம் அந்த பலியின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. மூக்கு மற்றும் கண்கள் மூலமாக பரவும் இந்த தொற்று நோய் நேரடியாக மூளையை பாதிப்படைய செய்கிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் இதற்கு முன்னரே கருப்பு பூஞ்சை தொற்று நோய் காரணமாக பாதிக்கப்பட்ட நோயாளிகள் தங்களுடைய ஒரு கண் பார்வையை இழந்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.