திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள வடமதுரை பகுதியைச் சேர்ந்தவர் விக்ரமன். இவர் கரூரில் கல்லூரியில் படிக்கும்போது ரேவதி என்கிற பெண்ணை 3 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்துள்ளார். இதனிடையே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரேவதியை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்த நிலையில், நாககோனார் என்ற பகுதியில் தனியாக வீடு எடுத்து இருவரும் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.
இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை ரேவதியை திருமணம் செய்வதாக கூறிய விக்ரமன் திடீரென தலைமறைவு ஆனதால் ரேவதியில் வருங்கால காதல் வாழ்க்கை கேள்விக்குறியானது. இதன்பின்னர் விக்ரமனின் வீட்டை தேடிக்கண்டுபிடித்து தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதுகுறித்து அறிந்த வேடசந்தூர் போலீசார் ரேவதியை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில்,
நாங்கள் 3 வருடமாக காதலித்து வருகிறோம் இந்த விஷயம் எங்கள் வீட்டிற்கு தெரிந்து பிரச்சினை ஆனது. விக்ரமனின் மாமா, அக்கா இருவரும் எங்களுக்கு தனியாக வீடு பார்த்து வைத்தனர். அதில் நாங்கள் 2 வருடமாக குடும்பம் நடத்தி வந்தோம். கடந்த ஞாயிற்று கிழமை வீட்டிலேயே திருமணம் செய்து வைப்பதாக கூறினார்கள். ஆனால் இப்போது விக்ரமனை காணவில்லை, அவரது அக்கா, மாமாவிற்கு போன் செய்தாலும் எடுப்பதில்லை என்று கண்ணீருடன் கூறினார்.
இந்த காலத்து இளம்பெண்கள் பள்ளி, கல்லூரி படிக்கும்போதே உணர்ச்சிவசப்பட்டு சினிமா மோகத்தில் போலியான காதல் வலையில் சிக்கி எதிர்கால வாழ்க்கையை சிதைத்துக்கொள்கின்றனர். காதல் என்கிற பெயரில் திட்டமிட்டே பெண்களை ஏமாற்றும் நாடக காதலன்கள் சமுதாயத்தில் அதிகரித்து வருவது தமிழ் சமூகத்திற்கு நல்லதல்ல.