வடமாநில தொழிலாளர்கள் குறித்து போலி வீடியோ! யூடியூபர் மனீஷ் காஷ்யப்பிற்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவு

Photo of author

By Anand

வடமாநில தொழிலாளர்கள் குறித்து போலி வீடியோ! யூடியூபர் மனீஷ் காஷ்யப்பிற்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவு

Anand

YouTuber jailed for publishing defamatory video of northern state workers being attacked in Tamil Nadu

வடமாநில தொழிலாளர்கள் குறித்து போலி வீடியோ! யூடியூபர் மனீஷ் காஷ்யப்பிற்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவு

வடமாநில தொழிலாளர்கள் குறித்து போலி வீடியோ பரப்பிய வழக்கில் யூடியூபர் மனீஷ் காஷ்யப்பிற்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில் இந்த வீடியோக்கள் வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியதோடு, சட்ட ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் இருந்தது. போலி வீடியோ பரப்பிய குற்றச்சாட்டின் கீழ் பீகார் காவல்துறையின் மணிஷ் காஷ்யப் உட்பட 4 பேர் மீது முதல் வழக்குப்பதிவு செய்தது. தொடர்ந்து போலி வீடியோ விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் மட்டும் இது தொடர்பாக 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் போலி வீடியோக்களை பகிர்ந்த மணிஷ் காஷ்யப் என்ற யூடியூபர் மீது பெருங்குடியை சேர்ந்த ஜெகதீசன் என்பவர் மதுரை மாவட்ட சைபர்கிரைம் பிரிவு போலீசிடம் புகார் மனு கொடுத்தன் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பீகாரில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த மனீஷ் காஷ்யப்பை தமிழகம் அழைத்து வந்து காவல்துறை விசாரணை செய்வதற்காக மணிஷ் காய்ஷப்பை கடந்த 30ம் தேதி மதுரை மாவட்ட முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி டீலாபானு முன்னிலையில் மனிஷ் காஷ்யப்பை ஆஜர்படுத்திய நிலையில் 3நாள் போலீஸ் காவலில் விசாரணை செய்ய உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் நீதிபதியின் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோது தொடர்ந்து பீகாரை சேர்ந்த யூடியூபர் மனீஷ் காஷ்யப்பை மேலும் 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து இந்த வழக்கு 5ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று காலை மீண்டும் நீதிபதி டீலா பானு முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார்.

இதனையடுத்து யூடியூபர் மனீஷ் காஷ்யப்பிற்கு வரும் 19ஆம் தேதிவரை 15நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்ட நிலையில் மனீஷ் காஷ்யப் மதுரை மத்திய சிறைக்கு காவல்துறை பாதுகாப்புடன் அழைத்துசெல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.