மாணவியின் காதலை மறைக்க ஆசிரியர் மீது பொய் பாலியல் வாக்குமூலம்! மாணவியின் கேடுகெட்ட செயல் அம்பலம்!!

0
177

மாணவியின் காதலை மறைக்க ஆசிரியர் மீது பொய் பாலியல் வாக்குமூலம்! மாணவியின் கேடுகெட்ட செயல் அம்பலம்!!

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை மகுடஞ்சாவடி அருகே அ.புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 2000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இப்பள்ளியில் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவரிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.அம் மாணவன் இந்த மாணவிக்கு சிறப்பு வகுப்பின் போது, பள்ளி வளாகத்தினுள் சாதம் ஊட்டி விடுவது வண்டியில் அழைத்துச் செல்வது போன்ற காட்சிகள் பள்ளியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.

இந்த சிசிடிவி காட்சிகளை கண்ட ஆசிரியர் ஒருவர் அந்த மாணவியை அழைத்து எச்சரித்து,மாணவியின் பெற்றோர்களை அழைத்து வருமாறு கூறியுள்ளார்.தான் மாட்டிக் கொள்வோமோ என்ற பயத்தில் அம்மாணவி வீட்டிற்கு சென்று விஷம் அருந்தி தற்கொலை முயற்சி செய்துள்ளார்.உடனடியாக உறவினர்கள் அந்த மாணவியை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அந்த மாணவியிடம் மாஜிஸ்திரேட் வாக்குமூலத்தினை பெற்றார்.மாஜிஸ்திரேடிடம் மாணவி ஆசிரியர் தன்னை பலாத்காரம் செய்ய அழைத்ததாகவும்,அதனால்தான் அவமானத்தில் நான் தற்கொலை முயற்சி செய்து கொண்டதாகவும் கூறியிருந்தார்.

இதன் பிறகு அந்த ஆசிரியரிடம் பள்ளி தலைமை ஆசிரியர் சார்பில் விசாரணை நடத்தப்பட்டது.அந்த விசாரணையில் ஆசிரியர்கள் சிசிடிவி காட்சிகளை ஒப்படைத்து நடந்ததைப் பற்றி கூறியுள்ளார்.அந்த மாணவி மாணவனுடன் இருக்கும் பழக்கத்தை மூடி மறைப்பதற்காக தற்கொலை நாடகம் ஆடியதும் கண்டித்த ஆசிரியர் மீது பொய்யான பாலியல் வாக்குமூலத்தை அளித்ததும் அம்பலமானது.
பின்பு இந்த விவகாரம் தொடர்பாக சைல்டு லைன் மற்றும் மகுடஞ்சாவடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Previous articleபள்ளிகளுக்கு எச்சரிக்கை! இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கபடும்!! பள்ளிக்கல்வி துறைவெளியிட்ட அதிரடி உத்தரவு!
Next articleபெற்றோர்களே எச்சரிக்கை! தமிழகத்தில் 9 லட்சம் குழந்தைகள் பாதிப்பு! அமைச்சரின் பரபரப்பு தகவல்!