பள்ளிகளுக்கு எச்சரிக்கை! இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கபடும்!! பள்ளிக்கல்வி துறைவெளியிட்ட அதிரடி உத்தரவு!

0
96

பள்ளிகளுக்கு எச்சரிக்கை! இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கபடும்!! பள்ளிக்கல்வி துறைவெளியிட்ட அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் டிசம்பர் 16ஆம் தேதி முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெற்றது.
அரையாண்டு தேர்வு விடுமுறையாக டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் பல அரசு பள்ளிகள்,அரசு உதவி பெறும் பள்ளிகள், மற்றும் தனியார் பள்ளிகள், மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தப்படுவதாக வாய்மொழி உத்தரவினை பிறப்பித்துள்ளது.10 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 30ம் தேதி வரை கட்டாயம் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என்று பள்ளிகள் உத்தரவிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் பள்ளி கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அதாவது அரையாண்டு தேர்வு விடுமுறையில் எந்தவித சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என்றும், பொதுத்தேர்வு எழுதும் 10 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் போன்றவற்றை கொடுக்கலாம் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் இந்த உத்தரவினை மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தினால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது.