கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கரூர் மாவட்டம் குளித்தலை அரசு மருத்துவமனையில் கணவர் தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவத்தை கேள்விப்பட்டிருப்போம். கொலை செய்த கணவர் தலைமறைவாக இருந்த நிலையில் போலீசாரால் கைதுசெய்யப்பட்டார். அவர் எதனால் தனது மனைவியை குத்தி கொலை செய்தார் என்கிற தகவலை வெளியிட்டுள்ளார்.
கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை சேர்ந்தவர் விஷ்ரூத். இவர் சென்னையில் கார் ஓட்டுநராக வேலை செய்தபோது ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த ஸ்ருதி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது.
பின்னர் சென்னையில் ஒரு நபருடன் ஸ்ருதிக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதல் செய்து வந்துள்ளார். இதனை அறிந்த விஷ்ரூத் தனது மனைவியை கண்டித்து சென்னையில் இருந்து குளித்தலைக்கு கூட்டி வந்துள்ளார். குளித்தலையில் ஒரு பள்ளியில் ஆசிரியையாக சுருதி வேலை செய்து வந்துள்ளார். இங்கும் இன்னொரு நபருடன் ஸ்ருதிக்கு பழக்கம் ஏற்பட்டு உல்லாசமாக இருந்துள்ளார்.
இந்த விஷயத்தை கேள்விப்பட்ட விஷ்ரூத் தனது மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் சிகிச்சை பெறுவதற்காக ஸ்ருதியை குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இருந்தும் தன்னுடைய ஆத்திரம் தீராத விஷ்ரூத் மருத்துவமனைக்கே சென்று மனைவி சுருதி இறக்கும் வரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். தாயும் இறந்து தந்தையும் போலீசாரால் கைது செய்யப்பட்டதால் குழந்தைகள் இருவரும் அனாதையாகி உள்ளனர். இந்த சம்பவம் குளித்தலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.