பிரபல நடிகர் திடீர் மரணம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Photo of author

By Hasini

பிரபல நடிகர் திடீர் மரணம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பிரபல மலையாள நடிகர் நெடுமுடி வேணு. இவருக்கு தற்போது வயது எழுபத்தி மூன்று ஆகும். 1978-ஆம் ஆண்டு சினிமாவின் மூலம் அறிமுகமானவர். இவர் அதற்கு முன் வரை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார். இது வரை இவர் 500 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் பொய் சொல்ல போறோம், சர்வம் தாள மையம், இந்தியன், அந்நியன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது ஷங்கர் இயக்கும் இந்தியன் -2 திரைப்படத்திலும் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இவர் மலையாள சீரியல்களில் கூட இணைந்து நடித்துள்ளார். 3 தேசிய விருதுகள் மற்றும் 6 மாநில திரைப்பட விருதுகளை வென்றுள்ளார். சமீபத்தில் இவர் கோரோனாவால்  பாதிக்கப்பட்டார். இவர் சிகிச்சையும் பெற்று வந்தார். சிகிச்சைக்குப் பின் அதிலிருந்து மீண்டு அவர் வீட்டில் இருந்தார்.

இந்நிலையில் நேற்று அவருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. அதன் காரணமாக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் கவலைக்கிடமாக உள்ளதாக கேரள மீடியாக்களில் செய்திகள் வெளியாகின. அரை மணி நேரத்திற்கு முன்பாக கூட அப்படித்தான் சொன்னார்கள். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் தற்போது காலமானார். இது அவரது ரசிகர்களிடையே வருத்தத்தை எற்படுத்தி உள்ளது.