வனப்பகுதியை தத்தெடுத்த கோடிக்கணக்கில் நன்கொடை அளித்த பிரபல நடிகர்!

Photo of author

By Parthipan K

வனப்பகுதியை தத்தெடுத்த கோடிக்கணக்கில் நன்கொடை அளித்த பிரபல நடிகர்!

Parthipan K

ஆந்திரா மாநில மக்கள் நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பதால் டண்டிகா வனப்பகுதியில் 1650  ஏக்கர் பரப்பளவை  தத்தெடுத்து 2 கோடி செலவில் மூலிகை நிறைந்த பூங்கா ஒன்றை அமைக்க பாகுபலி பிரபாஸ் முடிவெடுத்துள்ளார்.

இதற்காக ஏற்பாடுகள் தொடங்கப்பட்டு இருக்கும் நிலையில், அந்தப் பகுதியில் அமைந்துள்ள மேல் கோபுரத்தில் இருந்து  பூங்கா அமைக்கப்படும் பணிகளை கண்காணித்து வருகிறார்.

இதனால் ஆந்திர மாநிலத்தில் சுத்தமான காற்று பரவி நுரையீரல் சம்பந்தமான நோய்களிலிருந்து மக்களைக் காப்பாற்றலாம் என்று அவர் நம்புகிறார்.இப்படி ஒவ்வொரு பிரபலமும் காடுகளை  தத்தெடுப்பதன் மூலம்  காடுகளை அளிப்பதும் குறைந்து, அதிக மழைப்பொழிவு மற்றும் சுத்தமான காற்றையும் உருவாக்குவதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிரபாஸ் அண்மையில் ஒன்றிற்காக 5 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கியது குறிப்பிடத்தக்கது.