சென்னையிலிருந்து மீண்டும் சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்!!

0
57

சென்னையிலிருந்து மீண்டும் சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியதையடுத்து, கடந்த மார்ச் மாதம் 25-ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. தமிழகத்தில் தற்போது 8-ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. கடந்த மூன்று மாதமாக மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் ஒவ்வொரு தளர்வுகளை அறிவித்து வருகிறனர்.

அதனைத்தொடர்ந்து தற்பொழுது உள்ள எட்டாம் கட்ட ஊரடங்கு தளர்வுகளில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது .சென்னை மண்டலம் மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இரண்டு மண்டலங்கள் தவிர பிற மண்டலங்களுக்கு பொதுப்போக்குவரத்து ஜூன் ஒன்றாம் தேதி முதல் தொடங்கப்பட்டது.

அப்போது மண்டலங்களுக்கும் மட்டுமே பேருந்து போக்குவரத்து இயக்கப்பட்டு வந்தது .பின்னர் ஜூன் 26-ஆம் தேதி முதல் 30- ஆம் தேதி வரை சென்னை மண்டலத்தை தவிர்த்து பிற மண்டலங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து கொரோனா வைரஸ் வேகமாக பரவத் தொடங்கியது. செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் அனைத்து பேருந்து சேவையும் தொடங்கப்பட்டது.அதன்படி கடந்த ஒன்றாம் தேதி முதல் மீண்டும் பேருந்து சேவையை தொடங்கியது.

நேற்று முதல் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்தை தொடங்கிய நிலையில் சென்னையில் இருந்து ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்து அரசு பேருந்துகளில் வெளியூர் பயணம் செய்ய மேற்கொண்டனர் .முதல் நாளே நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ,ராமநாதபுரம் ஆகிய தென் மண்டல மாவட்டங்களுக்கு சென்னையில் இருந்து மக்கள் சென்றுள்ளனர்.

author avatar
Parthipan K