ரஷ்யாவிற்கு எதிரான போரில் உயிர் தியாகம் செய்த பிரபல நடிகர்

0
206
ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடங்கி 14 நாட்கள் ஆகிறது. 18 வயது முதல் 60 வயது வரை உள்ள ஆண்கள் ராணுவத்தில் சேர்ந்து நாட்டைப் பாதுகாக்கலாம் என்று உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஆயிரக்கணக்கானோர் ராணுவத்தில் சேர்ந்து ரஷ்ய படைகளுக்கு எதிராக போராடி வருகின்றனர். உக்ரைன் நடிகர் பாஷா லீ கடந்த வாரம் உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்தார்.
ரஷ்யாவிற்கு எதிரான போரில் உயிர் தியாகம் செய்த பிரபல நடிகர்
இதனிடையே, தனது நாட்டை காக்கும் போது ரஷ்ய படைகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் நடிகர் பாஷா லீ கடந்த 6ம் தேதி உயிர் தியாகம் செய்தார். லீ 2016 இல் ஆக்‌ஷன்-காமெடி படமான செல்ஃபி பார்ட்டி மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆக்‌ஷன் படமான தி ஃபைட் ரூல்ஸ் மூலம் புகழ் பெற்றார். நடிப்பைத் தவிர, பிரபலமான உக்ரேனிய பொழுதுபோக்கு நிகழ்ச்சியான ‘டே அட் ஹோம்’ நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் இருந்தார்.
நடிப்புடன், டப்பிங், பாடல் எழுதுதல், இசை என அனைத்திலும் தனக்கென தனி இடத்தைப் பிடித்தார். கடந்த சனிக்கிழமையன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாஷா லீ வெளியிட்ட பதிவில், கடந்த 48 மணி நேரமாக ரஷ்ய ராணுவத்துக்கு எதிராக நமது வீரர்கள் எப்படிப் போரிட்டனர் என்பதை நேரடியாகப் பார்க்க முடிந்தது. உக்ரைனுக்காக தொடர்ந்து போராடுவோம் என பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Previous articleவாகன ஓட்டிகளுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி! அடி மட்டத்திற்கு போகும் பெட்ரோல் டீசல் விலை!
Next articleதமிழக அமைச்சர்கள் பஜ்ஜி சாப்பிட்ட செலவு தான் ரூ.3 கோடி! பாஜக அண்ணாமலையின் அதிரடியான  ட்வீட்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here