தமிழ் திரையுலகில் உச்சத்தில் இருந்து பொத்தென்று விழுந்த பிரபல நடிகர்கள்!

0
146
#image_title

தமிழ் திரையுலகில் உச்சத்தில் இருந்து பொத்தென்று விழுந்த பிரபல நடிகர்கள்!

திரைத் துறையில் ஒரே படத்தில் கோபுர உச்சிக்கு சென்றவர்களும் இருக்கிறார்கள்,பல ஹிட் படங்களை கொடுத்து சரிவை சந்தித்தவர்களும் இருக்கிறார்கள்.சினிமாவை பொறுத்தவரை யார் உச்சத்திற்கு செல்வார்கள்,யார் சரிவார்கள் என்பது யூகிக்க முடியாத ஒன்று.இப்படி தமிழ் திரையுலகில் டாப் நடிகர்களாக இருந்து தாங்கள் செய்த சிறு தவறால் ஒரே நாளில் மார்க்கெட் இழந்த நடிகர்களின் விவரம் இதோ.

1.மோகன்

தமிழ் திரையுலகில் 80,90 காலகட்டங்களில் வெள்ளி விழா நாயகன் என்று கொண்டாடப்பட்டவர் மோகன்.ரஜினி,கமல் ஆகியோர் தமிழ் திரையுலகில் உச்சத்தில் இருந்து வந்த காலம் அது.அந்த காலகட்டத்தில் அவர்களுக்கு இணையான புகழோடு வலம் வந்தார் மோகன்.

மைக் மோகன் என்று அழைக்கப்படும் இவர் கடந்த 1980 ஆம் ஆண்டு வெளியான ‘மூடுபனி’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.அதனை தொடர்ந்து நெஞ்சத்தை கிள்ளாதே,கிளிஞ்சல்கள்,பயணங்கள் முடிவதில்லை,கோபுரங்கள் சாய்வதில்லை உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

தமிழ்,கன்னடம்,தெலுங்கு ஆகிய மொழிகளில் இதுவரை 80க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள இவர் 25க்கும் அதிகமான வெள்ளி விழா படங்களை கொடுத்துள்ளார்.பல தயாரிப்பாளர்களின் விருப்ப நாயகனாக,பெண்களின் காதல் மன்னனாக வலம் வந்து கொண்டிருந்த மோகனுக்கு நடந்த சில சம்பவங்கள் அவரின் திரை மற்றும் சொந்த வாழ்க்கையை அப்படியே தலைகீழாக மாற்றி விட்டது.

80,90களில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்த ஒருவர்,மோகனிடம் தன் காதலை தெரிவித்திருக்கிறார்.ஆனால் மோகன் அந்த நடிகையின் காதலை ஏற்க மறுத்திருக்கிறார்.இதனால் அந்த நடிகை மோகனுக்கு எய்ட்ஸ் இருப்பதாக வதந்தி பரப்பி விட்டதாகவும் அதனாலேயே மோகனின் திரை வாழ்க்கை முற்றிலும் முடங்கி விட்டது என்று சொல்லப்படுகிறது.இந்நிலையில் தற்பொழுது பல வருடங்களுக்கு பிறகு குஷ்புவுடன் இணைந்து ‘ஹாரா’ என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.விரைவில் பல ஆண்டுகளுக்குப் பிறகு மோகனின் படம் வெளியாக உள்ளது.

2.பிரசாந்த்

ஒரு காலத்தில் நடிகர்கள் விஜய்,அஜித் ஆகியோரை விட மிகவும் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த்.90களில் இவர் நடித்த படங்கள் அனைத்தும் பிளாக் பஸ்டர் படங்களாக கொண்டாடப்பட்டது.தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்த இவர் பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்தார்.இப்படி டாப் நடிகராக வலம் வந்து கொண்டிருந்த இவர் ஒரு கட்டத்தில் தன்னுடைய கதை தேர்வில் கோட்டை விட தொடங்கி தொடர் தோல்வி படங்களை கொடுத்து சினிமாவிலிருந்து ஓரம் கட்டப்பட்டார்.

அது மட்டுமின்றி பிரசாந்த் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட சில நிகழ்வுகள் இவருடைய சினிமா வாழ்க்கையை கேள்வி குறியாக்கியது.ஒரு காலத்தில் தமிழ் திரையுலகில் பீக்கில் இருந்த இவரின் திரை வாழ்க்கை தொடர் தோல்விகளால் சரிந்து விட்டது.இன்றும் சில படங்களில் பிரசாந்த் நடித்தாலும் 90களில் இவருக்கு இருந்த மவுசு இன்று குறைந்து விட்டது என்பது தான் நிதர்சனம்.

3.ஸ்ரீகாந்த்

தமிழ் திரையுலகில் குறுகிய காலத்தில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் ஸ்ரீகாந்த்.இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்களை கவரும் படியாக இருந்தது.இவர் நடிப்பில் வெளியான ரோஜா கூட்டம்,பார்த்திபன் கனவு,ஏப்ரல் மாதத்தில் போன்ற படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக இவருக்கு அமைந்தது.

2000 ஆம் ஆண்டில் விஜய்,அஜித்துக்கு போட்டியாக வெற்றி படங்களை கொடுத்த இவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் சினிமா வாழ்க்கையில் தன்னுடைய தடுமாற்றத்தை வெளிப்படுத்தினார்.ஒரு கட்டத்தில் தன்னுடைய கதை தேர்வில் கோட்டை விட தொடங்கி தொடர் தோல்வி படங்களை கொடுத்து சினிமாவிலிருந்து ஓரம் கட்டப்பட்டார்.இதனால் தற்பொழுது துணை வேடங்களில் நடித்து வருகிறார்.இருந்த போதிலும் 2000 ஆண்டில் இவருக்கு இருந்த மவுசு தற்பொழுது இல்லை என்பது தான் நிதர்சனம்.

4.அப்பாஸ்

தமிழ் திரையுலகில் 90களில் பீக்கில் இருந்த அப்பாஸ் குறுகிய காலத்திலேயே முன்னணி ஹீரோயின்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.தமிழ்,தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்த இவரின் படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படி தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த அப்பாஸ் எடுத்த சில தவறான முடிவுகளால் இவரின் திரை வாழ்க்கை கேள்வி குறியானது.ஒரே நேரத்தில் பத்து படங்களுக்கு மேல் கால்ஷீட் கொடுத்து அட்வான்ஸ் வாங்கி விட்டார்.ஆனால் இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவின.இதனால் தொடர் தோல்வி படங்களை கொடுத்து சினிமாவிலிருந்து ஓரம் கட்டப்பட்டார்.

Previous articleஅணியில் இவர்களுக்கு முக்கியத்துவம் ஏன்!! ரோஹித் சர்மா கொடுத்த அதிரடி விளக்கம்!!
Next articleதலையை சீவுங்க நான் 100 கோடி தரேன்!! உதயநிதி விவகாரத்தில் சீமான் அதிரடி!!