பிரபல நடிகை தற்கொலை!! திடுக்கிடும் தகவலை வெளியிட்ட போலீசார்!!

Photo of author

By Parthipan K

பிரபல நடிகை தற்கொலை!! திடுக்கிடும் தகவலை வெளியிட்ட போலீசார்!!

Parthipan K

பிரபல சின்னத்திரை நடிகையான சேஜல் சர்மா மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவருடைய காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நடிகை சேஜல் சர்மா இறப்பதற்கு முன்பு எழுதிய கடிதத்தில் தனிப்பட்ட காரணத்திற்காக தற்கொலை செய்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். ஆனால் அவருடைய தன் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

அதன்பின் தன்னுடைய மகளின் செல்போனை போலீசாரிடம் கொடுத்து ஏதாவது துப்பு கிடைக்குமா என்று பார்க்க சொல்லினர், செல்போனை ஆய்வு செய்த போலீசார் தற்கொலை செய்துகொண்ட அன்று, டெல்லியை சேர்ந்த மாடல் மற்றும் ஜிம் பயிற்சியாளர் ஆதித்யா வசிஷ்ட்  என்பவரிடம் தொடர்ந்து பேசியதாக தெரியவந்தது.

அதன்பின் அவரை கைது செய்து விசாரித்த போலீசார் பல திடுக்கிடும் உண்மைகளை வெளியிட்டுள்ளனர்.  நடிகை சேஜல் சர்மா சினிமா முன்னணி நடிகையாக அதற்காக ஏவல் பில்லி சூனியம்  என்ற தவறான வழியை ஆதித்யா வசிஷ்ட்  காண்பித்து, அவரிடம் பண மோசடி செய்துள்ளார்.ஒரு கட்டத்தில் அவரை காதலிப்பதாகவும் ஏமாற்றி வேண்டிய பணத்தை பெற்றுக்கொண்டார். அதன் ஒரு  கட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி சண்டை ஏற்பட காதல் முறிவு செய்துகொண்டனர்.

இதில் பெரும் மன உளைச்சல் அடைந்த நடிகை சேஜல் சர்மா தற்கொலை  முடிவை எடுத்துள்ளார். பாலிவுட்டில் தொடர்ந்து சினிமா பிரபலங்கள் தற்கொலை செய்து கொள்வது ரசிகர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது,