6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற அணி?

0
96
கிளப் அணிகளுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டிகள் போர்ச்சுகலில் நடைபெற்றது. இறுதி போட்டிக்குள் நுழைந்த ஜெர்மனி மற்றும்  பிரான்ஸ் அரைஇறுதி ஆட்டங்களில் வெற்றிபெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்தன. இதையடுத்து போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் இறுதி போட்டி நடைபெற்றது. இதில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற பேயர்ன் முனிச் அணியை எதிர்த்து முதல்முறையாக இறுதி போட்டிக்குள் நுழைந்த பி.எஸ்.ஜி. அணி மோதியது. இரு அணிகளுக்கும் கோல் அடிக்க அதிக வாய்ப்புகள் கிடைத்தபோதும் அவற்றை தவறவிட்டன.
இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் (45 நிமிடங்கள்) இரு அணிகளும் கோல் அடிக்காமல் 0-0 என்ற கணக்கிலேயே இருந்தது. 90 நிமிடங்கள் முடிவடைந்து போட்டியில் கூடுதலாக கடைசி 5 நிமிடங்கள் கொடுக்கப்பட்டன. இந்த கடைசி 5 நிமிடங்களிலும் பி.எஸ்.ஜி.யால் கோல் அடிக்கமுடியவில்லை. இதனால் பி.எஸ்.ஜி. பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பிரான்ஸ்) அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பேயர்ன் முனிச் (ஜெர்மனி) அணி 6-வது முறையாக ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை வெற்று கோப்பையை தட்டிச்சென்றது. இந்த வெற்றியை பேயர்ன் முனிச் வீரர்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
author avatar
Parthipan K