விஜய் மகனுக்கு ஜோடியாகும் பிரபல நடிகையின் மகள்!! இதுதான் கதை!!
திரையுலகில் இருக்கும் முக்கிய பெரிய நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய் ஆவார். இவருக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும், திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர்.
நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய்க்கு சினிமாத் துறையில் மிகுந்த ஆர்வம் உள்ளது. இவருக்கு இயக்குனர் ஆக வேண்டும் என்று லட்சியம் இருக்கிறதாம்.
அந்த வகையில், இவருக்கு பல்வேறு திரைப்பட வாய்ப்புகள் வந்துக்கொண்டே இருக்கிறது. இதை நடிகர் விஜய்யே ஒரு பேட்டியில் கூறி இருந்தார்.
தற்போது இவர் ஒரு பிரபலமான நடிகையின் மகளுடன் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதாவது நடிகர் விஜய்யுடன் இருபது ஆண்டுகளுக்கு முன்பு சூப்பராக ஜோடி போட்டு நடித்த நடிகை தேவயானியின் மகளுடன் தான் விஜய் மகன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நடிகை தேவயாணி இயக்குனர் ராஜகுமாரனை காதல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களில் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் ஒரு மகளை திரையுலகில் அறிமுகம் செய்ய இருப்பதாக அவரது தந்தை கூறி உள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு இவரின் புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்த நிலையில், இயக்குனர் ராஜகுமாரன் 1999 ஆம் ஆண்டில் அஜித் மற்றும் தேவயானியின் நடிப்பில் வெளிவந்த “நீ வருவாய் என” திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அதில், விஜய் மகன் சஞ்சய்யை ஹீரோவாகவும், தனது மகளை ஹீரோயினாகவும் நடிக்க வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படம் குறித்து இயக்குனர் ராஜகுமாரன் தீவிரமாக திட்டம் தீட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.இந்த செய்தி தற்போது கோலிவுட்டில் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது.