பிரபல நகைச்சுவை நடிகரின் கால் விரல் அகற்றம்! மருத்துவ செலவுக்கு கூட பணம் இல்லாமல் இருக்கும் நடிகர்!!

0
199
#image_title

பிரபல நகைச்சுவை நடிகரின் கால் விரல் அகற்றம்! மருத்துவ செலவுக்கு கூட பணம் இல்லாமல் இருக்கும் நடிகர்!

 

பிரபல நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன் அவர்களின் கால் விரல் அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டுள்ளது. மருத்துவச் செலவுக்கு கூட பணம் இல்லாமல் நடிகர் பாவா லட்சுமணன் அவர்கள் கஷ்டப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

நடிகர் பாவா லட்சுமனன் அவர்கள் நடிகர் வடிவேலு நடித்த அதிக படங்களில் நடித்துள்ளார். நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான மாயி திரைப்படத்தில் வா மா மின்னல் என்ற நகைச்சுவை மூலம் மிகவும் பிரபலமானவர்.  அதன் பிறகு பல படங்களில் இவர் நடித்துள்ளார். மேலும் நடிகர் சந்தானம் அவர்களுடன் சேர்ந்து சில படங்களில் நடித்துள்ளார்.

 

நடிகர் பாவா லட்சுமணன் அவர்கள் சமீபகாலமாக படவாய்ப்புகள் இன்றி வருமானம் இல்லாமல் தவித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு சர்க்கரை நோய் பாதிப்பும் இருந்துள்ளது. இதையடுத்து சர்க்கரை நோயின் தாக்கம் இவருக்கு அதிகமானதால் அறுவை சிகிச்சை செய்து கால் விரலை அகற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

 

இதையடுத்து சென்னை  ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நடிகர் பாவா லட்சுமணன் அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவரது கால் கட்டை விரல் அகற்றப்பட்டுள்ளது. இதையடுத்து நடிகர் பாவா லட்சுமணன் அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

கடந்த சில நாட்களாகவே பிரபல நடிகர்கள் பலரும் பட வாய்ப்புகள் கிடைக்காமல் வருமானம் இன்றி மருத்துவச் செலவுக்கு கூட பணம் இல்லாமல் தவித்து வரும் சூழல் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.