கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் தீ விபத்து! அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பில்லை என்று மந்திரி அறிவிப்பு!!

0
186
#image_title

கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் தீ விபத்து! அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பில்லை என்று மந்திரி அறிவிப்பு!

 

கொல்கத்தா மாநிலத்தில் சர்வதேச விமான நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து சிறிது நேரத்திலேயே தீ அணைக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பியது. இது தொடர்பாக மத்திய விமான போக்குவரத்துறை மந்திரி அவர்கள் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று அறிவித்துள்ளார்.

 

நேற்று அதாவது ஜூன் 14ம் தேதி கொல்கத்தா மாநிலத்தில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையத்தில் இரவு 9 மணியளவில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து விமான நிலையத்தின் 3சி புறப்பாடு முனைய கட்டிடத்தின் செக் இண் கவுண்டரில் ஏற்பட்டது.

 

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சிறிது நேரத்திலேயே தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. கொல்கத்தா விமான நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியான காட்சிகளில் செக்-இன் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தின் ஒரு பகுதி மட்டும் காட்டப்பட்டது.

 

விமான நிலைய அதிகாரிகள் முனையத்தில் இருந்த மக்களை பாதுகாப்பாக வெளியேற்றினர். இந்த தீ விபத்து தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்யா அவர்கள் பேட்டியளித்துள்ளார்.

 

இது தொடர்பாக அமைச்சர் ஜோதிராதித்யா அவர்கள் “டி போர்டல் செக்-இன் கவுண்டரில் தீ விபத்து ஏற்பட்டது. புகை மூட்டத்தால் பயணிகள் மற்றும் ஊழியர்கள் முனையத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. தீ அணைக்கபபட்டு இயல்பான சூழல் திரும்பியுள்ளது” என்று கூறியுள்ளார்.