பிரபல திரைப்பட எடிட்டர் தற்கொலை!!

Photo of author

By Vinoth

கேரள மாநிலம் கொச்சி பனம்பில்லி நகரைச் சேர்ந்தவர் நிஷாத் யூசுப். இவர் மலையாள திரைவுலகத்தில் தல்லுமாலா, உண்டா, ஒன் உள்ளிட்ட திரைப்படங்களில் எடிட்டராக பணியாற்றி உள்ளார். அவர் தன் மனைவி மற்றும் 2 குழந்தைகள் என கொச்சி பனம்பில்லி அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.

தல்லுமாலா திரைப்படத்திற்கு கடந்த 2022ல் கேரள அரசின் சிறந்த எடிட்டருக்கான விருதை பெற்றார். அதுமட்டும் இல்லாமல் தற்போது சூர்யா நடிக்கும் கங்குவா திரைப்படத்தின் எடிட்டராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மோகன்லால் மற்றும் மம்மூட்டி படங்களுக்கும் எடிட்டராக பணிபுரிந்து வந்தவர். இந்நிலையில் நேற்று அதிகாலை சுமார் 2 மணியளவில் மர்மமானமுறையில் நிஷாத் யூசுப் இறந்து கிடந்தார்.

மேலும் அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில் குடும்ப பிரச்னை காரணமாக நிஷாத் யூசுப் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவர்கள் தரப்பில் இருந்து கூறப்படுகிறது. மேலும் முழு விவரம் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின் தான் தெரிய வரும் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.