2வது திருமணத்திற்கு தயாரான பிரபல நடிகர்… காதலி வெளியிட்ட புகைப்படங்களால் கசிந்தது ரகசியம்!

0
247
wedding
wedding

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். 2009ம் ஆண்டு வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் தன்னுடைய ஏதார்த்தமான நடிப்பால் குள்ளநரி கூட்டம், முண்டாசுப்பட்டி, ஜீவா ஆகிய படங்கள் மூலமாக ரசிகர்கள் மனதை கவர்ந்தார். இவர் கடைசியாக நடித்து வெளியான திரைப்படம் ‘ராட்சசன்’. இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

vishnu vishal

 

விஷ்ணு விஷால் 4 வருடமாக காதலித்து வந்த தனது கல்லூரி ஜூனியர் ரஜினி என்ற பெண்ணை கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த காதல் தம்பதிக்கு அழகிய மகன் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக 2018ம் ஆண்டு இருவரும் விவகாரத்து பெற்று பிரிந்தனர்.

2வது திருமணத்திற்கு தயாரான பிரபல நடிகர்... காதலி வெளியிட்ட புகைப்படங்களால் கசிந்தது ரகசியம்!

விவகாரத்துக்குப் பிறகு படங்களில் கவனம் செலுத்தி வந்த விஷ்ணு விஷால், பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை காதலிக்க ஆரம்பித்தார். முதலில் இருவரும் எல்லாரையும் போலவே நாங்கள் நண்பர்கள் தான், காதலர்கள் இல்லை என சொல்லிவந்தனர். ஆனால் தனிமையில் இருவரும் ஒன்றாக இருப்பது, முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி காதலை கன்பார்ம் செய்தது.

2வது திருமணத்திற்கு தயாரான பிரபல நடிகர்... காதலி வெளியிட்ட புகைப்படங்களால் கசிந்தது ரகசியம்!

இந்நிலையில் விஷ்ணு விஷாலின் காதலியான ஜூவாலா கட்டா தன்னுடைய தோழிகளுடன் பிரைடல் பார்ட்டி கொண்டாடியுள்ள புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. திருமணத்திற்கு சில நாட்கள் இருக்கும் போது தோழிகள் மணப்பெண்ணுக்கு கொடுக்கும் பார்ட்டி இது. இதில் ஜூவாலா எதிர்கால மணமகள் என்கிற பேண்ட் அணிந்திருக்கிறார். எனவே இவருக்கும் விஷ்ணு விஷாலுக்கும் இன்னும் ஓரிரு நாட்களில் திருமணம் நடைபெற உள்ளது உறுதியாகியுள்ளது.

Previous articleதனக்கு தானே சூனியம் வைத்து கொண்ட வேட்பாளர்..!
Next articleஜாக்கெட்டை எங்கம்மா காணோம்? சேலையில் பிரபல பிக்பாஸ் நடிகை நடத்திய கவர்ச்சி போட்டோஷூட்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here