தனக்கு தானே சூனியம் வைத்து கொண்ட வேட்பாளர்..!

0
230

ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் குஷ்புவுக்கு போட்டியாக வாக்குறுதி அளித்த திமுக வேட்பாளர் எழிலன் நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய ஃப்ரன்ஸ் ஆப் போலீஸ் என்ற குழுவுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்ட நிலையில் அந்த அமைப்பை மீண்டும் கொண்டு வருவதாக கூறி தொகுதி மக்களின் எதிர்ப்பை பெற்றார்.

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிடும் குஷ்புவை எதிர்த்து திமுக சார்பில் எழிலன் போட்டியிடுகிறார். தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து நாள்தோறும் தொகுதி மக்களை சந்தித்து அவர்களுடன் ஒன்றாக பழகி வரும் குஷ்புவுக்கு ஆதரவுகள் பெருகி வருகின்றன. இந்த நிலையில் நேற்று குஷ்பு தனது தேர்தல் வாக்குறுதிகளை அளித்தார். பெண்களுக்கு இலவச ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என்றும், பெண் குழந்தை பிறந்தால் ஒரு லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்படும் எனவும் மாணவிகளுக்கு போட்டித்தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கப்படும் எனவும் வாக்குறுதிகளை அளித்தார்.

குஷ்புவின் இந்த வாக்குதிகளை பார்த்து திமுக வேட்பாளர் எழிலன் பெயருக்கு தன் பங்கிற்கு வாக்குறுதிகளை அளிப்போம் என எதையோ சொல்லி தனக்கு தானே சூனியம் வைத்துக் கொண்டார். 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவிகளுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வழங்கப்படும், மாணவர்கள் பட்டப்படிப்பு படிக்க ஊக்கத்தொகை வழங்கப்படும், தொழிலாளர் நலவாரியம் அமைக்கப்படும், ஆயிரம் விளக்கு தொகுதியில் இலவச Wi-Fi வசதி ஏற்படுத்தித்தரப்படும் என்றவர் இறுதியாக இடியை தூக்கி போட்டார்.

அதாவது மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே நட்புறவை ஏற்படுத்த ஃப்ரன்ஸ் ஆப் போலீஸ் என்ற அமைப்பை ஏற்படுத்துவேன் என கூறியுள்ளார். இந்த ஃப்ரன்ஸ் ஆப் போலீஸ் அமைப்பால் ஆங்காங்கே மக்களுக்கு தொந்தரவு ஏற்படுவது மட்டுமின்றி, அடியாட்கள் போல பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்படிப்பட்ட ஒரு அமைப்பிற்கு அரசு தடை விதித்து அரசாணை வெளியிட்ட நிலையில் அந்த தகவல் கூட அறியாமல் மீண்டும் அந்த ஃப்ரன்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை செயல்படுத்துவேன் என வாக்குறுதி அளித்து திமுகவின் எழிலன் தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்டார்.

காவல்துறையில் தன்னாவர்களே வந்து உதவி செய்வதும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கொண்டுவரப்பட்ட ஒரு அமைப்பு தான் ஃப்ரன்ஸ் ஆஃப் போலீஸ். இந்த ஃப்ரன்ஸ் ஆப் போலீஸ் அமைக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் தமிழக அரசு தடை விதித்து அரசாணை வெளியிட்டது. இதற்கு காரணம், சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 19ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் போலீசாரால் தாக்கப்பட்டு காவல் நிலையத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை அடுத்து, அவர்கள் இருவரும் உயிரிழக்க ஃப்ரன்ஸ் ஆப் போலீஸ் குழுவுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதன் காரணமாக ஜூலை மாதம் ஃப்ரன்ஸ் ஆப் போலீஸ் குழுவை தடை விதித்து தமிழக அரசாணை வெளியிட்டது. இந்த நிலையில் தமிழக அரசு தடை செய்த ஒரு அமைப்பை மீண்டும் கொண்டு வருவதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் திமுக வேட்பாளர் எழிலன்.

Previous articleஅமைச்சரின் மகளா இவர்..? -ஜெயலலிதாவையே மிஞ்சுடுவார் போலிருக்கே..!
Next article2வது திருமணத்திற்கு தயாரான பிரபல நடிகர்… காதலி வெளியிட்ட புகைப்படங்களால் கசிந்தது ரகசியம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here