பிரபல ஹாலிவுட் ஹீரோ திடீர் மரணம்!

 

ஹாலிவுட்  படங்களின் முன்னணி நடிகராக திகழும்  சாட்விக் போஸ்மேன் புற்றுநோயால் உயிரிழந்தார். இவர் தனது சினிமா பயணத்தை 2008 ஆம் ஆண்டு வெளியான  தி எக்ஸ்ப்ரஸ் தி எர்னீ டேவிஸ் ஸ்டோரி என்ற படத்தில் சிறு வேடத்தில்  நடிப்பதன் மூலம் தொடங்கினார்.

அதன்பின் 2013 ஆம் ஆண்டு அவர் நடிப்பில் வெளியான ‘42’ படத்தின் மூலம்  சாட்விக் போஸ்மேனுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதன்பின் மெகா ஹிட் கொடுத்த பிளாக் பேந்தர் படத்தில் நடித்த  சாட்விக் போஸ்மேனுக்கு உலகம்  முழுவதிலும் உள்ள ஹாலிவுட் ரசிகர்களின் கதா நாயகனாக மாறினார்.பிரபல ஹாலிவுட் ஹீரோ திடீர் மரணம்!அதன்பின் 2016 ஆம் ஆண்டே இவருக்கு பெருங்குடலில் புற்றுநோய் இருப்பது கண்டறிந்த, பின்னரும் அதனைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து படங்களில் அவ்வப்போது சிகிச்சை எடுத்துக் கொண்டே நடித்து வந்தார்.பிரபல ஹாலிவுட் ஹீரோ திடீர் மரணம்!சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாட்விக்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருடைய மரணத்திற்கு திரை பிரபலங்களும் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment