தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் கேமியோ ரோலில் நடிக்கப்போகும் பிரபல கன்னட நடிகர் !

Photo of author

By Savitha

‘கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் முடிவடையும் என்றும், அதற்கு பின் படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

‘ராக்கி’ படத்தின் மூலமாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் அருண் மாதேஸ்வரன் தற்போது தனுஷை வைத்து ‘கேப்டன் மில்லர்’ படத்தை இயக்குகிறார். இந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது, தனுஷுக்கு இந்த ஆண்டின் அடுத்த வெளியீடாக ‘நானே வருவேன்’ படம் அமைந்தது. இதனை தொடர்ந்து அவரது நடிப்பில் ‘வாத்தி’ படம் வெளியாகவுள்ள நிலையில், சமீபத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்திற்கான பூஜை நடைபெற்றது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள்மோகன் நடிக்கிறார் மற்றும் சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், குமரவேல், டேனியல் பாலாஜி, மூர், நாசர், விஜி சந்திரசேகர், சுவயம்சிதா தாஸ், பிந்து, பால சரவணன் போன்ற பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர், இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இந்த படம் சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் இருந்த புரட்சியாளரின் வாழ்க்கை மற்றும் செயலை வெளிக்காட்டும் வகையில் உருவாக்கப்பட இருக்கிறது. ஏற்கனவே கேப்டன் மில்லர் படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் ரூ.38 கோடிக்கு வாங்குவதாக தகவல்கள் வெளியானது. இப்படத்திற்கு பிரத்யேகமாக தென்காசியில் பகுதியில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு சில காட்சிகள் படமாக்கப்பட்டது. ‘கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் முடிவடையும் என்றும், அதற்கு பின் படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ‘கேப்டன்’ மில்லர் படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது, அதன்படி இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் மறைந்த பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் சகோதரனும், ராஜ்குமாரின் மகனுமாகிய ஷிவா ராஜ்குமார் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்திலும் ஷிவா ராஜ்குமார் நடிக்கிறார்.