பிரபல பாடகர் வீட்டில் திருட்டு!! சொந்த வீட்டிலேயே கை வைத்த உறவினர்கள்!!   

0
206
#image_title

பிரபல பாடகர் வீட்டில் திருட்டு!! சொந்த வீட்டிலேயே கை வைத்த உறவினர்கள்!!

பிரபல பாடகர்  யேசுதாஸ் மகனான  விஜய் யேசுதாஸ்  அவர்கள்   பின்னணி பாடகராக உள்ளார்  . இவர் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் தமிழ் போன்ற மொழிகளில் பாடல்களையும், சில  படங்களியில்  சிறந்த கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இவர் சென்னையில்  உள்ள அபிராமிபுரத்தில் இருக்கும்  தனது வீட்டியில் மனைவி உடன் வசித்து வந்தார். இந்நிலையில் அவர் வீட்டில் இருந்து 60 சவரன் தங்க நகைகள் மற்றும் வைர நகைகள் காணமல் போனதாக அவர் மனைவி அபிராமிபுரத்தில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அது குறித்து போலீசார்  சிசிடிவி மற்றும் அவர் வீட்டு பணியாளர்களிடம் விசாரணை நடத்தி வந்தனர்.

அவர்களிடம் நடை பெற்ற விசாரணையில் எந்த தகவலும் கிடைக்கப்படவில்லை. இந்நிலையில் போலீசார் தங்க நகை குறித்து அவர் மனைவியிடம் விசாரணை  செய்த போது அவர் மனைவி நான் டிசம்பர்  மாதம்தான் கடைசியாக அந்த நகைகளை பார்த்தேன் அதன்பின் இப்போது பார்க்கும் போது நகைகள் அந்த இடத்தில் இல்லை என கூறினார் . அதன் பின்பு மீண்டும் அவர் வீட்டில் உள்ள பணியாளர்களிடம் விசாரணை  நடத்தியதில் அவர்கள் யாரும் நகை எடுக்கவில்லை என்பது  தெரியவந்துள்ளது. அவர்கள் நகை வைத்திருந்த லாக்கரின் கடவுச்சொல் விஜய் யேசுதாஸ்  மற்றும் அவர் மனைவிக்கும் மட்டும் தெரியும் நிலையில் போலீஸ் சந்தேகத்துடன் நகை திருடு போனது உண்மையா என விசாரணை செய்து வருகின்றனர்.

Previous articleஇன்று தொடங்குகிறது TNPL கிரிக்கெட் தொடர்! முதல் போட்டியில் திருப்பூர் மற்றும் கோவை அணிகள் மோதல்!!
Next articleமாணவர்களின் சான்றிதழ் திருத்தம்!! இன்றே கடைசி நாள்!!