பிரபல தமிழ் எழுத்தாளர் திடீர் மரணம்!

Photo of author

By Rupa

பிரபல தமிழ் எழுத்தாளர் திடீர் மரணம்!

Rupa

Updated on:

Famous Tamil writer dies suddenly

பிரபல தமிழ் எழுத்தாளர் திடீர் மரணம்!

பிரபல எழுத்தாளர் 78 வயதான லட்சுமி ராஜரத்தினம் உடல்நலக் குறைவால் காலமானார்.இவர் திருச்சியில் 27/03/1942 ஆம் ஆண்டு பிறந்தார்.இவர் இதுவரை ஆயிரத்து ஐநூறு சிறுகதைகள்,முண்ணூற்றுக்கும் மேற்பட்ட நாவல்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட வானொலி நாடகங்களை நடத்தியுள்ளார்.

இதுமட்டுமல்லாமல் சென்னையில் 15 க்கும் மேற்பட்ட சின்னத்திரை நாடகங்களில் நடித்துள்ளார்.பிறகு மூன்று மெகா தொடர் நாடகங்களிலும்  நடித்துள்ளார். 3500 க்கும் அதிகமான ஆன்மிகக் கட்டுரைகளையும்  எழுதியுள்ளார்.

இவர் செந்தமிழ் செல்வி மற்றும் சொற்சுவை நாயகி என்ற பட்டங்களை பெற்றுள்ளார்.லட்சுமி ராஜரத்தினம் டாக்டர் பட்டமும் வாங்கியவர் என்பது குறிபிடத்தக்கது.

1991 ல் லட்சுமி ராஜரத்தினம் அவரின் எழுத்திற்காக கௌரவிக்கப்பட்டார். 1993 ல் ஆன்மீகச் சொற்பொழிவுக்காக மீண்டும் ஒருமுறை கௌரவிக்கப்பட்டார்.இவர் நல்ல பாடகியாகவும் திகழ்ந்துள்ளார்.திருவையாறு தியாகராஜ ஆராதனையில் பாடியுள்ளார். 2500 க்கும் மேற்பட்ட சொற்பொழிவுகளை நடத்தியுள்ளார்.இந்நிலையில் உடல்நலக் குறைவால் லட்சுமி ராஜரத்தினம் இன்று காலமானார்.