விசிகவினர் செய்த அராஜகம் -விசிகவின் கொடி கம்பத்தை பிடிங்கி எரிந்த மக்கள்.

0
222

விசிகவினர் செய்த அராஜகம் -விசிகவின் கொடி கம்பத்தை பிடிங்கி எரிந்த மக்கள்.

2021 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் திமுக கூட்டணியில் உள்ள விசிகவின் கொடிக் கம்பத்தை மதுரை உசிலம்பட்டியில் உள்ள மக்கள் பிடுங்கி எறிந்து உள்ளார்கள்.

அதாவது மதுரையில் உள்ள உசிலம்பட்டி பஸ் நிலையத்திற்கு அருகில் விசிக வினர் தங்களுடைய கொடிக் கம்பத்தை புதிதாக அமைத்துள்ளார்கள். இதற்கு அந்த பஸ் நிலையத்திற்க்கு அருகில் உள்ள ஆட்டோ ஓட்டுனர் சங்கம் இது எங்கள் சங்கத்தின் பலகை வைக்கும் இடம் அதனால் இங்கு விசிக கொடியை அமைக்காதீர்கள் என்று கேட்டுள்ளார்கள் ஆனால் அதை கண்டுகொள்ளாமல் விசிக நிர்வாகிகள் கட்சி கம்பத்தை நட்டுள்ளார்கள்.

இதனால் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் தென்னிந்திய ஃபார்வேர்ட் பிளாக் கட்சியினர் ஒன்றாக திரண்டு சாலை மறியல் போராட்டத்தை நடத்தியுள்ளார்கள் .இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்பு காவல் துறையினர் முன்னிலையில் மக்கள் திரளாக திரண்டு வீசிகவின் கம்பத்தை பிடிங்கி கீழே வீசியுள்ளார்கள்.

இது தேர்தல் நேரம் என்பதாலும் மற்றும் கலவரங்கள் ஏற்பட கூடாது என்று நினைத்தும் அங்குள்ள காவல் அதிகாரிகள் அந்த இடத்தில் உள்ள அனைத்துக் கட்சிக் கொடிகளையும் இறக்கினார்கள். இந்த சம்பவத்தால் உசிலம்பட்டியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உசிலம்பட்டியில் விசிகவின் கம்பம் அகற்றியதற்க்கு அந்த கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் சாதிவெறியர்களை கண்டித்து ட்விட் செய்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது உசிலம்பட்டியில் இன்று (சன-28)விசிக கொடியை அதிகாரிகள் அகற்றியுள்ளனர். அத்துடன்,அங்கே பறந்த அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொடிகளும் அகற்றப்பட்டுள்ளன.
சாதிவெறியர்களின் நெருக்கடிக்கு அதிகாரிகள் பணிவது வாடிக்கையே! ஆனால், ஆளுங்கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் எப்படி அதற்கு இணங்கினர்கள்?
என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு விசிக வின் தொண்டர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இதே போல் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 2019 மக்களவைத் தேர்தலுக்காக திமுகவின் அனைத்து கூட்டணி கட்சிகளின் கொடிக்களும் கட்டப்பட்டிருந்தது நிலையில் அதில் விசிக வின் கொடியை மட்டும் திமுகவினர் பஸ் மீது ஏறி பிளேடால் கட் செய்தார்கள், மேலும் உயர் சாதியினர்கள் ‌வாழும் இடங்களில் சுவரொட்டி விளம்பரங்களில் கூட திருமாவளவன் பெயரை போடாமல் மற்ற கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பெயரை பதிவு செய்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

Previous articleஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் கதகளி ஆடும் கருணாஸ் குழப்பத்தில் அதிமுக !
Next articleஇந்த பட்ஜெட் நாட்டிற்கு மிகவும் முக்கியம்! எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு!