ரசிகர்களே… உலகக் கோப்பை போட்டிக்கு கூடுதலாக 4,00,000 டிக்கெட்டுகள் விற்பனை – பிசிசிஐ வெளியீடு !!

0
194
#image_title

ரசிகர்களே… உலகக் கோப்பை போட்டிக்கு கூடுதலாக 4,00,000 டிக்கெட்டுகள் விற்பனை – பிசிசிஐ வெளியீடு

வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ள 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி வீரர்களின் பெயர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் போட்டி நடைறெ இருக்கிறது. இப்போட்டியில், இந்தியா, பாகிஸ்தான் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உட்பட 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.

இந்தப் போட்டி அக்டோபர் முதல் நவம்பரை நடைபெறும். இந்தியா-நியூசிலாந்துக்கான போட்டி அக்டோபர் 5ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளன.

இந்நிலையில், BCCI வர உள்ள 50 ஓவர் உலகக் கோப்பை 2023 போட்டிக்கு கூடுதலாக 400,000 டிக்கெட்டுகளை வெளியிடுவதாக அறிவித்திருக்கிறது.

இது குறித்து பிசிசிஐ தெரிவிக்கையில்,

உலகக் கோப்பை தொடரில் இந்தியா பங்கேற்கும் அனைத்து போட்டிகளுக்கான டிக்கெட் தேவை அதிகரித்திருக்கிறது. டிக்கெட்டுக்கள் விற்பனை சில நிமிடங்களில் விற்று தீர்ந்ததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மேலும்,  ஐசிசி உலகக் கோப்பை 2023ம் ஆண்டு அதிகாரப்பூர்வ டிக்கெட் பார்ட்னரான BookMyShowல் ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது ரசிகர்கள் சில சிரமங்களை எதிர்கொண்டனர். இது குறித்து ரசிகர்கள் புகார் கொடுத்த நிலையில், ரசிகர்களின் கோரிக்கையை பூர்த்தி செய்ய, பிசிசிஐ தற்போது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நாளை (செப்டம்பர் 8 ஆம் தேதி) இரவு 8 மணி முதல் 400,000 டிக்கெட்டுகளை வழங்க உள்ளது.

உலகக் கோப்பைத் தொடரில் இந்தியப் போட்டிகள் முக்கியத்தும் பெற்றுள்ளது. இதனால், ரசிகர்களுக்கு இடமளிக்க 400,000 கூடுதல் டிக்கெட்டுகளை வெளியிடப்பட உள்ளது.

உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இந்த ஆண்டு உலகக் கோப்பை போட்டியை காண, பொது டிக்கெட் விற்பனை செப்டம்பர் 8ம் தேதி இரவு 8:00 மணிக்கு தொடங்கும். https://tickets.cricketworldcup.com என்ற இணையதளத்தில் டிக்கெட் விற்பனை விவரங்கள் வழங்கப்படும்.

Previous articleதள்ளாத வயதில் மகனின் உடலை வண்டியில் வைத்து தள்ளிச்சென்ற தாய்!! ஆம்புலன்ஸ் கிடைக்காமல் தொடரும் அவலநிலை!!
Next articleபிளாக்பஸ்டர் அடித்த ஜவான்!! திரையரங்குகளில் இனிமேல் தீபாவளி கொண்டாட்டம் தான் சாதித்த அட்லீ!!