Breaking News, National, News, Sports

ரன் அடிக்காமலே சிராஜை கொண்டாடிய ரசிகர்கள்.. நடந்தது என்ன?? மறுமுனையில் நிதீஷ்!!

Photo of author

By Vijay

cricket: இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவுடன் விளையாடி வரும் போட்டியில் இந்திய அணி பவுலர் சிராஜ் செய்த செயல் கொண்டாடிய ரசிகர்கள்.

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் 3 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இந்த தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்று ஒரு போட்டியில் சமன் செய்துள்ளது. இதில் நடக்கும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் உள்ளது.

நேற்று முன்  தினம் மெல்போர்ன் மைதானத்தில் 4 வது போட்டி தொடங்கியது. இந்த போட்டியின் மூன்றாவது நாளான இன்று இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. முதலில் ஆஸ்திரேலிய அணி 474 ரன்கள் அடித்தது. தொடர்ந்து இந்திய அணி களமிறங்கியது. இதில் நிதீஷ் ரெட்டி சிறப்பாக விளையாடி வருகிறார்.

இதில் நிதிஷ் ரெட்டி 99 ரன்களுடன் மறுமுனையில் இருக்க வாஷிங்டன் அவுட் ஆகினார். அடுத்து களமிறங்கிய பும்ரா உடனே ஆட்டமிழந்தார். 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இந்திய அணி மொத்தமும் சிராஜ் பக்கம் திரும்பியது. அந்த ஓவரில் இன்னும் ஒரு பந்து மட்டும் இருந்த நிலையில் அவரும் விக்கெட் இழந்து விடக்கூடாது என வேண்டி கொண்டு இருந்தனர். அதை அவர் தடுக்க மொத்த அணி ரசிகர்களும் ஆரவாரமாக கொண்டாடினார்கள். அடுத்த ஓவரில் களமிறங்கிய நிதீஷ் சதம் விளாசினார்.

ஃபர்ஸ்ட் நைட் முடிந்ததும்  எஸ்கேப்.. இது வரை ஆறு திருமணம்!! ஏழாவது திருமணத்தில் வசமாக சிக்கிய பெண்!!

தனி ஆளாக மானம் காத்த நிதிஷ்.. துவண்டு போன ஆஸி பவுலர்கள்!! சதம் விளாசி சாதனை!!