லியோ டிரெய்லர் வெளியான உற்சாகத்தில் ரசிகர்கள் செய்த செயல்!!! தியேட்டரை எல்லாமா உடைச்சு கொண்டாட்டத்தை வெளிப்படுத்துவாங்க!!?

0
123
#image_title

லியோ டிரெய்லர் வெளியான உற்சாகத்தில் ரசிகர்கள் செய்த செயல்!!! தியேட்டரை எல்லாமா உடைச்சு கொண்டாட்டத்தை வெளிப்படுத்துவாங்க!!?

நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று(அக்டோபர்5) வெளியான நிலையில் சென்னையில் பிரபல திரையரங்கு ஒன்றின் இருக்கைகளை சேதப்படுத்தி ரசிகர்கள் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். ரசிகர்கள் செய்த இந்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாகி உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு தகவல் தான். இந்த திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளது.

லியோ திரைப்படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வந்த நிலையில் ரசிகர்களின் கவனம் படத்தின் டிரெய்லர் மீது திரும்பியது. அதன்படி லியோ படக்குழு டிரெய்லர் வெளியீட்டுக்கு தேதியை அறிவித்து அதன்படி நேற்று(அக்டோபர்5) லியோ டிரெய்லரை படக்குழு வெளியிட்டது.

அதன்படி பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான லியோ டிரெய்லர் தற்பொழுது யூடியூபில் டிரெண்டிங்கில் இருந்து வருகின்றது. மேலும் லியோ டிரெய்லர். பல சாதனைகளை புரிந்து வரும் நிலையில் லியோ டிரெய்லரை வெளியிட்ட திரையரங்கு ஒன்றுக்கு ரசிகர்கள் பெரும் சோதனையை கொடுத்துள்ளனர்.

சென்னை கோயம்பேட்டில் பிரபலமான ரோகினி திரையரங்கு இயங்கி வருகின்றது. இங்கு லியோ திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று(அக்டோபர்5) திரையிடப்பட்டது. அப்பொழுது டிரெய்லர் வெளியாவதற்கு முன்பும் டிரெய்லர் வெளியான பின்பும் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர்.

ஆனால் திரையரங்கின் உள்ளே ரசிகர்கள் அனைவரும் அமரும் இருக்கைகளை உடைத்து லியோ டிரெய்லர் வெளியானதை கொண்டாடியுள்ளனர். ரசிகர்களின் இந்த செயல் திரையரங்கு உரிமையாளர்களுக்கு பெரும் சோகத்தையும் கோபத்தையும் அளித்துள்ளது. மேலும் இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Previous articleSBI வங்கியில் அசத்தல் வேலைவாய்ப்பு!! மொத்தம் 439 காலியிடங்கள்!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க பிரண்ட்ஸ்!!
Next articleகான்வே மற்றும் ரச்சின் ரவீந்திராவின் சிறப்பான ஆட்டம்!!! உலகக் கோப்பை வெற்றியுடன் தொடங்கிய நியூசிலாந்து!!!