கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திராவின் சிறப்பான ஆட்டம்!!! உலகக் கோப்பை வெற்றியுடன் தொடங்கிய நியூசிலாந்து!!!

0
24
#image_title

கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திராவின் சிறப்பான ஆட்டம்!!! உலகக் கோப்பை வெற்றியுடன் தொடங்கிய நியூசிலாந்து!!!

நேற்று(அக்டோபர்5) தொடங்கிய உலகக் கோப்பை தொடரில் முதல் போட்டியில் டேவிட் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திராவின் சிறப்பான ஆட்டத்தால் நியூசிலாந்து அணி உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்று நடப்பாண்டுக்கான உலகக் கோப்பை தொடரை வெற்றியுடன் தொடங்ககயுள்ளது.

நேற்று(அக்டோபர்5) உலகக் கோப்பை தொடர்பு கோலாகலமாக தொடங்கியது. இதில் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தும் நியூசிலாந்து அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களின் முடிவில் இதில் 9 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் அரைசதம் அடித்து 77 ரன்கள் சேர்த்தார். ஜாஸ் பட்லர் 43 ரன்கள் சேர்த்தார். மற்றும் இங்கிலாந்து அணியின் மற்ற பேட்ஸ்மென்கள் அனைவரும் 25, 20, 15, 10 என்று இரட்டை இலக்கத்தில் ரன்களை சேர்த்தனர்.

நியூசிலாந்து அணியில் மேட் ஹென்றி 3 விக்கெட்டுகளையும், சேன்ட்னர், கிளென் பிலிப்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ரட்சின் ரவீந்திரா, டிரென்ட் போல்ட் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதையடுத்து 283 ரன்களை இலகக்காக கொண்டு களமிறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர் வில்யங் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அதன் பிறகு ஜோடி சேர்ந்த டெவான் கான்வென்ட் மற்றும் ரச்சின் ரவீந்திரா இணை மிகச் சிறப்பாக விளையாடத் தொடங்கியது.

ஒரு புறம் அதிரடியாக விளையாடிய டெவான் கான்வே சதம் அடித்து 152 ரன்கள் சேர்த்து நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார். மறுபுறம் ரச்சின் ரவீந்திரா சதம் அடித்து 123 ரன்கள் சேர்த்து நியூசிலாந்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதன் மூலம் நியூசிலாந்து அணி 36.4 ஓவர்களின் முடிவில் 1 விக்கெட் மட்டும் இழந்து 283 ரன்கள் எடுத்தது.

இதனால் நியூசிலாந்து அணி உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி 9 விகாகெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பந்துவீச்சில் ஒரு விக்கெட்டையும் பேட்டிங்கில் சதம் அடித்து 123 ரன்கள் சேர்த்து இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு உதவிய ரச்சின் ரவீந்திரா ஆட்டநாயகன் விருதை கைப்பற்றினார்.

என்னதான் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி தலைவி அடைந்திருந்தாலும் உலகக் கோப்பை வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளது. அதாவது இதுவரை நடைபெற்ற உலகக் கோப்பை தொடர்களில் எந்த ஒரு போட்டியிலும் ஒரு அணியின் 11 பேட்ஸ்மென்களும் இரட்டை இலக்கத்தில் ரன் எடுத்தது இல்லை.

அந்த வகையில் உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு அணியின் 11 பேட்ஸ்மேன்களும் இரட்டை இலக்கத்தில் ரன் எடுத்த சாதனையை இங்கிலாந்து அணி படைத்துள்ளது. பேரிஸ்டோ 33 ரன்களும், மாலன் 14 ரன்களும், ஜோ ரூட் 77 ரன்களும், ஹாரி பிரூக் 25 ரன்களும், மொயின் அலி 11 ரன்களும், ஜாஸ் பட்லர் 43 ரன்களும், லிவிங்ஸ்டன் 20 ரன்களும், சாம் கரன் 14 ரன்களும், கிறிஸ் வோக்ஸ் 11 ரன்களும், அடில் ரஷித் 15 ரன்களும், மார்க் வுட் 13 ரன்களும் எடுத்தனர்.