ஜவான் படத்தை பார்த்து ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள்!! காரணம் இதுதான்!! 

0
211
Fans who were disappointed after watching Jawan!! This is the reason!!
Fans who were disappointed after watching Jawan!! This is the reason!!

ஜவான் படத்தை பார்த்து ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள்!! காரணம் இதுதான்!! 

இன்று வெளியான ஷாருக்கானின் ஜவான் படத்தை பார்த்து ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ஜவான் படத்தில் இளைய தளபதி விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக வெளியான தகவலையொட்டி தற்போது அவர் நடிக்காததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

பாலிவுட்டில் நடிகர் ஷாருக்கான் நடித்து இன்று வெளியாகி இருக்கும் படம் தான் ஜவான். தெறி, மெர்சல், ராஜா ராணி, போன்ற வெற்றி படங்களை தந்த அட்லி பாலிவுட்டில் இயக்குனராக இந்த படத்தின் மூலம் அவதாரம் எடுத்துள்ளார். அவர் மட்டும் இல்லாமல் கதாநாயகியாக நயன்தாராவும், வில்லனாக விஜய் சேதுபதி, மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

ஜூன் 10-ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினரால் அறிவிக்கப்பட்ட நிலையில் அதன் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்ததால் இன்று படம் வெளியிடப்பட்டது. இந்தப் படம் தொடங்கியபோதே இளைய தளபதி விஜய் சிறப்பு தோற்றத்தில் இந்த படத்தில் நடிப்பதாகவும், அவர் தொடர்பான காட்சிகள் சென்னையில் எடுக்கப்பட்டதாகவும், பல்வேறு தகவல்கள் உலா வந்தன. இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால் ஜவான் படத்தின் விளம்பரப் பணியில் ஈடுபட்டிருந்த அட்லி விஜய் இந்த படத்தில் நடிக்கவில்லை என்றும், நடித்து இருந்தால் கட்டாயம் நான் சொல்லியிருப்பேன் என்று கூறினார்.இந்த சூழ்நிலையில் உலகம் முழுவதும் இன்று வெளியான ஜவான் படம் நல்ல விமர்சனங்களை பெற்று வந்த சூழ்நிலையில் நடிகர் விஜய் நடிக்கவில்லை என்ற செய்தி கடைசி நேரத்தில் தெரிவிக்கப்பட்டதால் விஜய் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர்.

மேலும் இந்த படத்தில் இயக்குனர் அட்லி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஎதனால் இவர்களுக்கு இவ்வளவு மவுசு! சிந்திக்க வைக்கும் தமிழ் நடிகர் நடிகைகளின் திறமைக்கு மீறிய புகழ்!
Next articleஎன்னது… ‘பாரத்’ பெயருக்கு தோனி முழு ஆதரவா? தோனியின் இன்ஸ்டா டிபியால் பெரும் சர்ச்சை!