எதனால் இவர்களுக்கு இவ்வளவு மவுசு! சிந்திக்க வைக்கும் தமிழ் நடிகர் நடிகைகளின் திறமைக்கு மீறிய புகழ்!

0
40
#image_title

எதனால் இவர்களுக்கு இவ்வளவு மவுசு! சிந்திக்க வைக்கும் தமிழ் நடிகர் நடிகைகளின் திறமைக்கு மீறிய புகழ்!

திறமை இருந்தும் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நடிகர், நடிகைகள் பலர்.இவர்களுக்கு மத்தியில் எப்படி திரையுலகிற்கு வந்தார்கள்,எதனால் இவர்களுக்கு இவ்வளவு மவுசு என்று சொல்லும் அளவிற்கு இருக்கின்ற சில நடிகர்,நடிகைகளின் தொகுப்பு இதோ.

1.ரம்பா

கடந்த 2000 ஆம் ஆண்டின் முற்பகுதியில் திரைப்படத் துறையில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரம்பா.இவர் தெலுங்கு,தமிழ்,கன்னடம்,மலையாளம்,இந்தி,பெங்காலி,போஜ்புரி, ஆங்கிலம் என்று மொத்தம் 8 மொழிகளில் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து நடித்திருக்கிறார்.

இவர் இயக்குநர் கதிர் இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு வெளியான உழவன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமானார்.ரம்பாவின் இரண்டாவது படமான ‘உள்ளத்தை அள்ளித்தா’ படம் சூப்பர் ஹிட் படமாக வெற்றி பெற்று இவருக்கு பெரும் புகழை தேடித் தந்தது.

இதனை தொடர்ந்து ‘தொடை அழகி’ என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட ரம்பா விஜய்,அஜித்,ரஜினி,கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்தார்.ஆரம்பத்தில் ஹோம்லி பெண்ணாக களம் இறங்கிய ரம்பா தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்ததால் கவர்ச்சியில் என்ட்ரி கொடுக்க தொடங்கினார்.

‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தில் இடம் பெற்றிருந்த ‘அழகிய லைலா’ என்ற பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடி தமிழ் ரசிகர்களை தன் வசம் ஈர்த்த ரம்பா தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான சில ஆண்டுகளில் முன்னணி நடிகையாக வளர்ந்து மற்ற நடிகைகளை வாயடைக்க வைத்தார்.காரணம் இவரின்
கவர்ச்சியான நடிப்பு.இவரின் நடிப்பு பெரிதாக பேசப்படவில்லை என்றாலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து மிகவும் புகழ் பெற்றார்.இதனை தொடர்ந்து கடந்த 2010 ஆம் ஆண்டு இலங்கைத் தமிழ் தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாதனை திருமணம் செய்து கொண்டார்.

2.த்ரிஷா

இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் புகழ் பெற்ற முன்னணி நடிகையாக வலம் வருகிறார். திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன் மாடலிங் துறையில் பணியாற்றிய இவர் கடந்த 1999 ஆம் ஆண்டு ‘மிஸ் சேலம்’,’மிஸ் சென்னை’ பட்டம் வென்றுள்ளார்.இதன் காரணமாக இவருக்கு 1999 ஆம் ஆண்டு வெளியான ‘ஜோடி’ திரைப்படத்தில் நாயகி சிம்ரனின் தோழியாக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

பின்னர் ‘லேசா லேசா’ என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான இவர் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்து முன்னணி நடிகையானார்.இவர் விஜய்,அஜித்,ரஜினி,கமல்,சூரியா,விக்ரம்,தனுஷ் என்று அனைத்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.2011 ஆம் ஆண்டு வெளியான ‘மங்காத்தா’ படம் வரை இவரின் திரைப் பயணம் நன்றாக சென்ற நிலையில் அதன் பிறகு நடித்த படங்கள் எதுவும் சரியாக ஓடவில்லை.இதனால் சில ஆண்டுகள் பட வாய்ப்பின்றி தவித்து வந்தார்.

பின்னர் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ’96’ படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்த இவர் மீண்டும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.ஆனால் 2011 மற்றும் 2017 ஆகிய இடைப்பட்ட காலத்தில் இவரின் படங்கள் சரியாக ஓட வில்லை.இருந்த போதிலும் மீண்டும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் என்பதை நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கின்றது.திரைப்பயணத்தை தொடங்கிய குறுகிய ஆண்டுகளில் புகழின் உச்சியை தொட்ட த்ரிஷாவின் நடிப்பு பெரிதாக பேசப்படவில்லை என்றாலும் இன்றும் முன்னணி நடிகைகளில் ஒருவராக தான் இருக்கிறார்.

3.ஜோதிகா

2000 ஆம் ஆண்டில் திரையுலகில் கொடி கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் ஜோதிகா.கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு கதாநாயகியாக அறிமுகமானார்.பின்னர் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கவே விஜய்,அஜித்,கமல்,விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.

இவர் தமிழ்,கன்னடம்,மலையாளம்,தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் 45க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் சூர்யாவை காதலித்து கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.இவர்கள் இருவரும் சேர்ந்து இதுவரை 8 படங்களில் நடித்திருக்கின்றனர்.

திரைப்பயணத்தை தொடங்கிய குறுகிய ஆண்டுகளில் புகழின் உச்சியை தொட்ட ஜோதிகாவை 100 ரூபாய்க்கு நடிக்க சொன்னால் 1000 ரூபாய்க்கு நடிக்கிறார்,ஓவர் ஆக்ட்டிங் என்று பலர் விமர்சித்து இருக்கின்றனர்.இவர் நடித்த படங்களில் ஒரு சில படங்களே நன்றாக ஓடின.இருந்தும் இவர் திரையுலகில் முன்னணி நடிகை என்று தன்னை காட்டிக் கொண்டார்.

4.ராதிகா

கடந்த 1980 முதல் 1995 ஆம் ஆண்டு வரையிலான கால கட்டங்களில் முன்னணி நடிகையாக அறியப்பட்டவர் ராதிகா.பிறப்பால் திரைக் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் எளிதில் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.கடந்த 1978 ஆம் ஆண்டு வெளியான ‘கிழக்கே போகும் ரயில்’ திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமானார். இதனை தொடர்ந்து தெலுங்கு,மலையாளம்,கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றார்.

இவர் ரஜினி,கமல்,சத்யராஜ்,சரத்குமார்,மோகன்,விஜயகாந்த் என்று 90 கால கட்டங்களில் முன்னணி நடிகர்களாக இருந்த அனைவருடனும் நடித்தார்.சில படங்களில் கவர்ச்சியாக நடித்த ராதிகா திரைப்பயணத்தை தொடங்கிய குறுகிய ஆண்டுகளில் புகழின் உச்சத்தை தொட்டார். இவரின் நடிப்பு பெரிதாக பேசப்படவில்லை என்றாலும் அந்த காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார்.

5.விஜய் சேதுபதி

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி.கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான ‘தென்மேற்கு பருவக்காற்று’ என்ற திரைப்படத்தில் தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமானார்.அதனை தொடர்ந்து பீட்சா,நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற படங்கள் இவருக்கு பெரும் புகழைத் தேடி தந்தது.இதனால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது.

இவரின் எதார்த்த நடிப்பை மக்கள் பாராட்டினர்.ஆரம்ப காலங்களில் பெயர் சொல்லும் படியான படங்களில் நடித்த இவர் அதன் பிறகு வாய்ப்புகள் அதிகம் கிடைத்தும் இவரின் படங்கள் சரியாக ஓடவில்லை.இவரின் கதை தேர்வு சரியாக அமையவில்லை.பின்னர் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ’96’ படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார்.ஆரம்ப காலங்களில் இவரின் நடிப்பு பெரிதாக பேசப்படவில்லை.நடித்த படங்கள் அடுத்தடுத்து தோல்வியை கொடுத்தாலும் அவரின் மார்க்கெட் மட்டும் குறையவில்லை.

தற்பொழுது முன்னணி ஹீரோவாகும்,வில்லனாகவும் கலக்கி வரும் விஜய் சேதுபதி திரைப்பயணத்தை தொடங்கிய குறுகிய ஆண்டுகளில் புகழின் உச்சத்தை எப்படி அடைந்தார் என்றே தெரியவில்லை என்று பலர் கூறுகின்றனர்.