இந்தியன் ரயில்வே துறை தரப்பில் மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகைகள் கொரோனா காலகட்டத்திற்கு முன்பு வரை வழங்கப்பட்டு வந்த நிலையில், கொரோனா துவங்கிய பெண் இந்த கட்டண சலுகை ஆனது ரத்து செய்யப்பட்டுள்ளது. கட்டண சலுகை ரத்து செய்யப்பட்ட 5 ஆண்டுகளில் ரூ.8,913 கோடி ரூபாய் இந்தியன் ரயில்வே துறை லாபம் ஏற்றி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் ரயில்வே துறை மற்றும் மத்திய அரசு தரப்பில் மூத்த குடிமக்கள் ( ஆண்கள் ) மற்றும் திருநங்கைகள் ரயில்களில் பயணிப்பதற்கு 40% கட்டண சலுகையும் மூத்த குடிமக்களான பெண்கள் ரயிலில் பயணம் செய்வதற்கு 50% கட்டணச் செலகையும் வழங்கப்பட்ட வந்து நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் இவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. அதன்பின் தொடர்ந்து பல அரசியல் கட்சிகள் தரப்பில் கோரிக்கைகள் வைத்து வந்த பொழுதிலும் மத்திய அரசு மீண்டும் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை நடைமுறைப்படுத்த முடியாது என மறுத்துவிட்டது.
இது குறித்த நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில் அதற்கு மத்திய அரசு தெரிவித்த பதில் பின்வருமாறு :-
ஏற்கனவே இந்திய ரயில்வே துறையின் தரப்பில் அனைத்து பயணிகளுக்கும் 46% கட்டண சலுகை ஆனது வழங்கப்பட்டு வருவதாகவும் இதனால் தனியாக மூத்த குடிமக்களுக்கு என ரயில் பயண கட்டணத்தை குறைக்க முடியாது என்றும் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் குறைக்க முடியாது என்றும் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருக்கிறார்.
அதுமட்டுமில்லாத மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்திரசேகர் கௌர் என்பவர் இது குறித்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்விகள் எழுப்பிய நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ரயில்வேக்கு மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை நிறுத்தப்பட்டதில் 8,913 கொடி கூடுதல் வருவாய் கிடைத்திருப்பதாகவும் இதனால் மீண்டும் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை நடைமுறைப்படுத்த முடியாத என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.