மீண்டும் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் உயர்வு! திக்குமுக்காடும் பயணிகள்!

0
297
Fare hike in omni buses again! Stumbling passengers!
Fare hike in omni buses again! Stumbling passengers!

மீண்டும் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் உயர்வு! திக்குமுக்காடும் பயணிகள்!

இந்த மாதம் தொடர்ச்சியாக விடுமுறைகள் வரவுள்ளது. அந்த வகையில் சனி ,ஞாயிறு தொடர்ந்து சுதந்திர தின விழாவையொட்டி இன்றும் விடுமுறை அளித்துள்ளனர். இதனால் வெளியூர்களில் வேலை செய்பவர்கள் வெள்ளிக்கிழமையே தங்கள் சொந்த ஊருக்கு வர கிளம்பியுள்ளனர். பலர் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முன்கூட்டியே பேருந்துகள் மற்றும் ரயில்களில் முன்பதிவு செய்துள்ளனர். முன்பதிவின்றி ஆம்னி பேருந்துகளில் செல்லலாம் என்று நினைத்தவர்கள் பெரும் பாதிப்பை சந்திக்க நேரிட்டது.

ஏனென்றால் தொடர்ச்சியாக மூன்று நாள் விடுமுறை என்பதால் ஆம்னி பேருந்துகள் தங்களின் கட்டணத்தை உயர்த்தி விட்டனர். வழக்கத்தை விட இரண்டு மடங்கு கட்டணத்தை உயர்த்திவிட்டனர். இதனை பல பயணிகள் கண்டித்து போக்குவரத்து துறையிடம் புகார் அளித்தனர். பயணிகள் அளித்த புகாரின் பேரில் போக்குவரத்து துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு அதீத கட்டணத்தை வசூல் செய்த ஆம்னி பேருந்துகளிடமிருந்து கட்டணத்தை பயணிகளிடமே திருப்பித் தர வழி செய்தனர்.

இவ்வாறு இருந்த வேலையில் மூன்று நாட்கள் விடுப்பு முடிந்தது. மீண்டும் தங்கள் வேலைக்கு செல்ல பயணிகள் கிளம்பிய நிலையில்  மீண்டும் ஆம்னி பேருந்துகள் நான்கு  மடங்கு கட்டணத்தை உயர்த்தி உள்ளது. சென்னையில் இருந்து திருச்சிக்கு ரூ. 3200 வரை வசூல் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல சென்னையில் இருந்து கோவைக்கு சாதாரணமாக ஆயிரம் ரூபாய் வசூல் செய்யப்படும் நிலையில் தற்பொழுது 4000 ஆக கட்டணத்தை உயர்த்தியுள்ளனர்.தனியார் ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதையொட்டி நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து துறையிடம் பயணிகள் புகார் அளித்துள்ளனர்.

Previous articleகடனை திருப்பி கேட்டதால் கொலை மிரட்டல் விடுத்த தம்பதி! கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு!
Next articleஇந்த வாரம் நீங்கள்… நினைத்தது எல்லாம் நடக்கப்போகிறது… எந்த ராசிக்கு?.