‘என் பேரைச் சொல்லியே’ என மஞ்சள் உடையில் அழகான வீடியோவை வெளியிட்ட பாரதிகண்ணமா வெண்பா!!

0
176

‘என் பேரைச் சொல்லியே’ என மஞ்சள் உடையில் அழகான விடியோவை வெளியிட்ட பாரதிகண்ணமா வெண்பா!!

பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை பரீனா வெளியிட்டுள்ள வீடியோ இன்ஸ்டாகிராமில் மிகவும் தீயாக பரவி வருகின்றது.

ஒரு தொகுப்பாளினியாக இருந்து தமிழ் சீரியலுக்கு வந்தவர் தான் நடிகை பரீனா ஆசாத். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் வெண்பா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

திருமணமான பாரதியை எப்படியாவது அடைந்தே தீரவேண்டும் என்று பலவிதங்களில் பிரச்சனை செய்து வரும் வெண்பா கதாபாத்திரம் பாரதிகண்ணம்மா சீரியல் மிக முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது.

மேலும், வெண்பாவின் சூழ்ச்சியால் தான் பாரதியும் கண்ணம்மாவும் 8 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அத்துடன் இரட்டை குழந்தை பெற்றெடுத்த கண்ணம்மாவின் குழந்தைகளும் தனித்தனியே வளர இதுதான் காரணமாக இருக்கிறது. இதனை தொடர்ந்து விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா சீரியல் தான் டிஆர்பி ரேட்டிங் முதலிடத்தில் இருக்கின்றது.

https://www.instagram.com/p/CR029xODgDY/?utm_source=ig_web_copy_link

இந்த சீரியலில் வில்லியாக நடித்து வரும் பரீனாவுக்கு சில வருடங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. இவர் கர்ப்பமாக இருக்கிறார் என்ற தகவல் வெளிவந்து இருந்த நிலையில், இவர் போட்டோ ஷுட்டுகளை நடத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்தார்.

தற்போது அவர் வெளியிட்ட வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் அவர்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Previous articleஇந்த வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!! மாணவர்களுக்கு அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்!!
Next articleஅச்சோ… நடிகை யாஷிகாவின் நிலைமை?!! இரண்டு மாசமாகும்…அவரது தாய் வெளியிட்ட தகவல்!!