Bank- இல் இருந்து வந்த நோட்டீஸ்! உயிரிழந்த விவசாயி! BJP அரசு காரணமா?

0
215
#image_title

55 வயது மதிக்கத்தக்க ஒருவர் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள நாரயன்பூர் என்ற கிராமத்தில் கடன் சுமையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியினர் இடையே மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

நாடு முழுவதும் ஏகப்பட்ட விவசாயிகள் தங்களது நிலங்களின் மீது கடன்களை வாங்கி உள்ளனர். மழை சரியாக பெய்யாத காலங்களில்,விவசாயம் சரியாக நடைபெறாத காலங்களில் கடன் கட்ட முடியாத நிலை வரும் பொழுது இந்த மாதிரியான அசம்பாவிதங்கள் ஏற்படுகின்றன. அப்படித்தான் சத்தீஸ்கர் மாநிலத்தில் 55 வயது மதிக்கத்தக்க விவசாயி ஒருவர் கடன் சுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகவும் சோகத்தையே ஏற்படுத்தி உள்ளது.

 

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்த போலீசார் கடன் சுமை தாங்க முடியாமல் தான் ,அதேபோல் விவசாயம் சரியாக நடைபெறாமல் இருந்ததால் மனம் உடைந்து போன விவசாயி தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆனால் தற்கொலை சம்பந்தமான எந்த ஒரு தடயமும் அங்கு இல்லாததால் இது இயற்கையான மரணம் என்று போலீசார் சொல்லினர்.

 

ஆனால் அந்த 55 வயது மதிக்கத்தக்க விவசாயின் மகன், தங்களுக்கு 9 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தின் மீது அருகில் உள்ள பேங்கில் Zila Sahkari Bank 1.12 லட்சம் விவசாய கடன் வாங்கியுள்ளோம். வங்கியில் இருந்து எங்களுக்கு 1.24 லட்சம் கட்டுமாறு நோட்டீஸ் வந்தது. அதனால் எனது தந்தை மிகவும் சோகமாக இருந்தார்.

அடுத்த நாள் நிலத்தில் அவர் மட்டுமே தனியாக இருந்தார். பிறகு வீடு திரும்பும் பொழுது அவர் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார். அவரது நிலைமை மோசமாகவே அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தோம். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் போனது. என்று தனது இரங்கலை தெரிவித்துக் கொண்டு இருந்தார்.

 

முந்தைய எலக்ஷனில் பிஜேபி கட்சியின் தீபக் பைஜி என்பவர் தான் அரசியலுக்கு வந்தால் 2 லட்சம் வரை உள்ள விவசாய கடன்களை தள்ளுபடி செய்கிறேன் ,என்ற வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் அது எதுவும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Previous articleபோடு! New Update! Super Star “லால் சலாம்” பாடல்!
Next articleஇடைவிடாத கொட்டும் மழை! மிதக்கும் குடியிருப்புகள்?