அதிமுக கூட்டணிக்கு ஆதரவளித்த முக்கிய கூட்டமைப்பினர்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

Photo of author

By Sakthi

தமிழகத்தில் உள்ள விவசாயிகள் சேலம் எட்டு வழி சாலை மற்றும் ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை தமிழகத்தில் அனுமதித்ததாக தெரிவித்து ஆளும் கட்சியான அதிமுகவுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தார்கள்.அதேபோல மத்திய அரசு கொண்டுவந்த விவசாய சட்டங்களை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.

இந்தநிலையில், எதிர்வரும் சட்டசபைத் தேர்தலில் எப்படியும் விவசாயிகளின் ஆதரவு ஆளும் கட்சிக்கு இருக்கப்போவதில்லை என்று சொல்லப்பட்டது.இதில் வேடிக்கை என்னவென்றால் மத்திய அரசு கொண்டுவந்த விவசாய சட்டங்களுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்கள் அனைத்தும் திமுகவின் தூண்டுதலின் பெயரிலேயே நடந்திருக்கிறது. இதில் அந்தப் போராட்டங்கள் நடைபெற்ற காலகட்டங்களில் நடந்தவற்றை யோசித்துப் பார்த்தால் அதை புரிந்து கொள்ளலாம்.

முதலில் வட இந்தியாவில் மட்டுமே விவசாயிகள் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள் தமிழகம் அமைதியாக தான் இருந்து வந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல திமுக ஆங்காங்கே போராட்டங்களை அறிவித்து அதில் ஆட்களை சேர்த்துக்கொண்டு போராடத் தொடங்கியது அதன்பிறகுதான் தமிழகத்தில் விவசாயிகள் போராடத் தொடங்கினார்கள்.

தமிழகத்தைப் பொருத்தவரையில் விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக அரசு பல்வேறு விஷயங்களை செய்து இருக்கிறது. ஆனால் அது அனைத்தையுமே பொய் என்ற முறையில் பிரச்சாரம் செய்து வருகிறார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்.

இப்படி மாநில அரசுக்கு எதிராக விவசாயிகள் மட்டுமல்லாது பல்வேறு தரப்பினரையும் தூண்டிவிட்டு போராட்டம் செய்ய வைத்தது எதிர்க்கட்சி. அதன்மூலம் தமிழகத்தில் அதிமுகவின் செல்வாக்கை சரித்து விடலாம் என்று திட்டம் போட்டு பார்த்தது எதிர்கட்சியான திமுக.ஆனால் இந்த விஷயத்தில் அந்த கட்சியின் திட்டம் பலிக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

இந்த நிலையில், சேலம் மாவட்டம் நெடுஞ்சாலை நகரில் இருக்கின்ற முதல்வர் தங்கியிருக்கின்ற ஒரு இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக விவசாயிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் நேற்று சந்தித்து இருக்கிறார்கள். இந்த சந்திப்பு நிகழ்ந்த போது விவசாயிகள் நலனுக்காக அரசு கொண்டுவந்த பல்வேறு திட்டங்கள் மற்றும் சலுகைகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் நன்றியை தெரிவித்துக் கொண்டார்கள்.

எதிர் வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு தங்களுடைய முழு ஆதரவையும் தருகிறோம் என்று தெரிவித்து இருக்கிறார்கள். இது தொடர்பாக விவசாயிகள் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்ததாவது, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகளின் வளர்ச்சிக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்து இருக்கிறார். மக்காசோளத்தில் படை புழு தாக்குதல் ஏற்படும் சமயத்தில் அதற்கு நிவாரண நடவடிக்கைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செய்து இருக்கிறார் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

அதேபோல குடிமராமத்து திட்டங்கள் மூலமாக மாநிலத்தின் நீராதாரங்கள் எல்லாவற்றையும் சரி செய்து இருக்கிறார். விவசாயிகளின் நலனுக்காக காவிரி மற்றும் கோதாவரி ஆகிய ஆறுகளின் இணைப்பு திட்டம் காவிரி குண்டாறு இணைப்பு திட்டம், போன்றவற்றை முதலமைச்சர் விரிவாக செயல்படுத்த வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

ஒரு விவசாயி ஆக இருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராக பொறுப்பேற்க வேண்டும். ஆகவே இந்த சமயத்தில் இந்த தேர்தலில் அதிமுகவிற்கு உங்கள் ஆதரவை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார்கள் விவசாயிகள் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பாக.